பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பராசக்தி படத்தின் வசூல் விவரம் குறித்து...
நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
தணிக்கை குழுவின் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, ஜன. 10 ஆம் தேதி வெளியானது.
ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
பராசக்தி படம் முதல் நாள் வசூலாக ரூ. 27 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படம் 2 நாள்களில் உலகளவில் ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
The box office collection details of actor Sivakarthikeyan's film 'Parasakthi' have been officially announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.