ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு பராசக்தி திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இருந்தும், உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரோட்டர்டமில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் பராசக்தி திரைப்படம் தேர்வாகியுள்ளது. உலகளவில் முக்கியமான திரைவிழாவாகக் கருதப்படும் ரோட்டர்டமில் இப்படம் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
parasakthi movie elected to rotterdam film festival
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.