இர்ஃபானின் வாகை சூட வா தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் இர்ஃபான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள வாகை சூட வா என்ற புதிய தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் பவித்ரா, குயிலி, மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பொறுப்பாகப் படித்து முன்னேற நினைக்கும் நாயகிக்கும், பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நாயகனுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொடர் மதுரையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
வாகை சூட வா தொடர் வரும் ஜன. 26 ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
மீண்டும் சின்ன திரையில் இர்ஃபான்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகர் இர்ஃபான்.
இதனைத் தொடர்ந்து இர்ஃபான், சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனிடையே, மெர்குரி பூக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானா இர்ஃபான், பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், ரூ, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சின்ன திரையில் இர்ஃபான் நடிக்கவுள்ளது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.