முகப்பு
செய்திகள்

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

வாரத்தின் 7 நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் -2 தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்...

Updated On : 3 பிப்ரவரி 2026, 5:11 pm IST
எதிர்நீச்சல் நாயகிகள் - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

வாரத்தின் 7 நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் -2 தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது (எதிர்நீச்சல் -2) ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, கனிகா, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களின் புகுந்த வீட்டில் உள்ள ஆண்களுக்கு எதிராக போராடுவதையும் அதற்காக சந்திக்கும் சவால்களையும் கருவாக வைத்து இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எதிர்நீச்சல் தொடர்கிறது - படம் - எக்ஸ்

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகம் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாகவே இருந்து வந்தது. தற்போது, இரண்டாம் பாகத்திற்கு முந்தைய பாகத்தைப்போன்று சிறந்த வரவேற்பு கிடைக்கவில்லை.

டிஆர்பி புள்ளிகளைத் தக்கவைக்க புதுப்புது பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அடுத்தடுத்து கதைக்களை நீண்டுக்கொண்டே செல்கிறது.

எதிர்நீச்சல் -2 தொடரின் மறுஒளிபரப்பு காலை 8.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், அந்த நேரத்தில் எதிர்நீச்சல் - 2 தொடரை ஒளிபரப்புவது நிறுத்தப்படவுள்ளது. இதற்கு பதிலாக காலை 8.30 மணிக்கு இதிகாச தொடரான ராமாயணம் ஒளிபரப்பப்படவுள்ளது.

summary

Thirumurugans Ethirneechal 2 Serial Timing Changed in sun tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments