FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

புது வசந்தம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

புது வசந்தம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:16 pm IST
புது வசந்தம் தொடர் - படம்: விடியோ கிளிப்
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வரும் தொடர் புது வசந்தம். பகல் நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் அதிக ரசிகர்களைப் பெற்ற தொடராக இந்தத் தொடர் உள்ளது.

கடந்த ஜூலை 2023 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு புதுவசந்தம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement

Advertisement

ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நாயகி, கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகச் சென்று, அங்கு சந்திக்கும் சவால்களையும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்பை எவ்வாறு பெறுகிறாள் என்பதை மையப்படுத்தியும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தத் தொடரில், வைஷ்ணவி, கௌதமி வேம்புநாதம், சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பீகாக் ஸ்டுடியோஸ் மற்றும் சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இந்தத் தொடரை அருள்ராய் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், புது வசந்தம் தொடர் ஆக. 10 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோதினி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

summary

The broadcast time of the serial Pudhu Vasantham, currently airing on Sun TV, has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments