களம்காவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜிதின் கே.ஜோஷ் இயக்கத்தில் கடந்த டிச.5ஆம் தேதி உலகம் முழுக்க களம்காவல் திரைப்படம் வெளியானது.
இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும், இதில் பல நடிகைகள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான விநாயகனின் விசாரணையும் மம்மூட்டியின் வில்லத்தனமும் படத்திற்கு பலமாக அமைந்தது.
இந்த நிலையில், களம்காவல் திரைப்படம் வரும் ஜன. 16 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.