தில்லியில் சிவகார்த்திகேயன்: பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொங்கல் விழாவில் பராசக்தி திரைப்படக் குழுவினர் இன்று கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு நிறைவடைந்த பிறகு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பேசியதாவது:
”அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பொங்கலை கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் நேர்மறையான எண்ணங்கள் நம்மிடையே பரவட்டும்.
பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மக்கள் அதை புரிந்துகொண்டு சரியான முறையில் எடுத்துக்கொள்கிறார்கள், நாங்கள் என்ன நோக்கத்துடன் செய்தோமோ அது மக்களைச் சென்றடைகிறது. அவர்கள் படத்தை முழுமையாகப் பார்த்தால், புரிந்துகொள்வார்கள்.
எனக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. விஜய்யின் அரசியல் பயணத்துக்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக ஊடகங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய படம் விரைவில் வெளியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பராசக்தி திரைப்படத்தில் வரலாற்றை திரித்துக் காட்டியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.