நடிகர் ஆதி நடிக்கும் மரகத நாணயம் 2 ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ல் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவான மரகத நாணயம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, மரகத நாணயத்தின் 2 ஆம் பாகமும் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆக்ஸஸ் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிடோர் நடிப்பதாகவும், சத்யராஜும் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் பணியாற்றிய குழுவினரே இரண்டாம் பாகத்திலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.