நடிகர் சிரஞ்சீவியின் எம்எஸ்விபி (மன ஷங்கர வர பிரசாத் காரு) திரைப்படம் அவரது படங்களிலே அதிகம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜன.12ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
நகைச்சுவை, சென்டிமென்ட் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் பிரபாஸ் படத்தினை விட நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தெலுங்கு மாநிலங்களில் ஐந்தாம் நாளில் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படமாக இந்தப் படம் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுவரை 6 நாள்களில் மட்டும் ரூ.261 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படம் விரைவிலேயே ரூ.300 கோடியை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகம் வசூலித்த சிரஞ்சீவி திரைப்படங்கள்
1. மன ஷங்கர வர பிரசாத் காரு - ரூ.261 கோடி*
2. சைரா நரசிம்ம ரெட்டி - ரூ.241 கோடி
3. வால்டர் வீரய்யா - ரூ.232 கோடி
4. கைதி நம்.150 - ரூ.164 கோடி
5. காட்ஃபாதர் - ரூ.108 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.