நடிகர் ராம் சரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் உடற்பயிற்சிக்குப் பிறகான புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தினை ரசிகர்கள், “இந்தியாவின் ஹல்க்” எனக் குறிப்பிட்டு வருகிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ராம் சரண் (வயது) தற்போது பெத்தி எனும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை புஜ்ஜி பாபு சனா இயக்குகிறார்.
உள்ளூரில் விளையாட்டு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்திற்காக தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்து வருகிறார்.
புகைப் படத்தைப் பகிர்ந்த ராம் சரண், “முழு உற்சாகத்துடன், அமைதியாகப் பணியாற்றுகிறேன்! அடுத்த சவாலுக்குத் தயாராக இருக்கிறேன்!” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவில் ரசிகர்கள், “பீஸ்ட் மோட் ஆன், சூப்பர் அண்ணா”, “இந்தியாவின் ஹல்க்” எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ராம் சரணின் கடைசி திரைப்படம் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் சுமாரான வரவேற்பையே பெற்றது.
பெத்தி திரைப்படமாவது அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தருமா என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.