அழகே அழகு தொடர். 
செய்திகள்

இயக்குநர் பிரவீன் பென்னெட்டின் அழகே அழகு: ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

இயக்குநர் பிரவீன் பென்னெட்டின் அழகே அழகு தொடரின் ஒளிபரப்பு தேதி தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் பிரவீன் பென்னெட் இயக்கும் புதிய தொடரின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரவீன் பென்னெட் புதிய தொடரை இயக்குகிறார். இந்தத் தொடருக்கு அழகே அழகு என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

செல்லம்மா தொடர் நடிகை அன்ஷிதா, கனா தொடர் நாயகி தர்ஷனா, நீ நான் காதல் நாயகன் பிரேம் ஜேக்கப், தமிழும் சரஸ்வதியும் தொடர் நடிகை நக்‌ஷத்ரா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மேலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற குணாலன் குமரேசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் பிரவீன் பென்னெட் இயக்கும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடிக்கும். பிரியா தம்பியின் வசனம் இந்தத் தொடருக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. குறிப்பாக அழகு மலர், அழகு மதி என்ற இரு மருமகள்களை பிரதானப்படுத்தி அழகே அழகு தொடர் எடுக்கப்படுகிறது.

வெவ்வேறு குடும்பத்தில் பிறந்த இருபெண்கள், புகுந்த வீட்டுக்கு மருமகள்களாக வந்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வேலைக்கு செல்லும் மருமகள், வீட்டு வேலைகளைப் பொறுப்பாகப் பார்க்கும் மருமகள் என இரு வெவ்வேறு பின்னணி கொண்ட இரு மருமகள்களின் கதையாக இந்தத் தொடர் உள்ளது.

அழகே அழகு என்ற புதிய தொடர் வரும் ஜன. 26 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The broadcast date of director Praveen Bennett's 'Azhage Azhagu' series has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதிவுத்துறை இணையதளம் இயங்காது! முன்கூட்டியே பயன்படுத்த அறிவுறுத்தல்!

பதற்றங்களுக்கு மத்தியில் சென்செக்ஸ் 82 ஆயிரத்துக்கு கீழே சென்று நிறைவு!

நாட்டை உலுக்கிய அத்துமீறல் விடியோ! கேரள பெண் கைது!

யு19 உலகக் கோப்பை: இரட்டைச் சதத்தை தவறவிட்ட இங்கி. வீரர்! ஸ்காட்லாந்துக்கு 405 ரன்கள் இலக்கு!

டிரம்ப்பின் அழைப்பு ஏற்பு! காஸா அமைதி வாரியத்தில் இணைந்தார் நெதன்யாகு!

SCROLL FOR NEXT