முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!
ஆடுகளம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது குறித்து...
முக்கியத்துவம் பெறும் நேரம் என்று கூறப்படும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் தொடர் முக்கியத்துவம் பெறா(non prime) நேரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
டிஆர்பியை கூட்டுவதற்காகவும் மற்ற தொலைக்காட்சி தொடர்களின் போட்டிகளாலும் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் அவ்வபோது மாற்றியமைக்கப்படும்.
அந்தவகையில், எதிர்நீச்சல், சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, ஆடுகளம் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்தாண்டு ஏப். 7 ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு வாரத்தின் ஏழு நாள்களும் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் தொடர் வரும் பிப். 9 ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரைம் டைம்(Prime Time) எனப்படும் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களை மக்கள் விரும்பிப் பார்ப்பதால் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இந்த நிலையில், ஆடுகளம் தொடர் பிற்பகலில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு, ஆடுகளம் தொடரை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரில் அவருக்கு ஜோடியாக சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார்.
மேலும், பிரதான பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
prime time serial aadukalam moved to non prime time
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.