மங்காத்தா மறுவெளியீட்டு வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து பிரம்மாண்டமாக நேற்று (ஜன. 23) 400க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது.
எதிர்பார்க்கப்பட்டதுபோல், தமிழகத்தின் பல பகுதிகளில் மங்காத்தாவின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்களாக இப்படத்தைப் பார்த்த பலரும், இன்று 30 வயதைக் கடந்தவர்கள் என்பதால் நெகிழ்ச்சியாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 5.5 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 5 கோடியை வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.