நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாரா விஜயன்.  படம்: யூடியூப் / நெட்பிளிக்ஸ் இந்தியா.
செய்திகள்

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நடிகை துஷாரா விஜயன் தமிழக அரசின் திரைப்பட விருது வென்றது குறித்து கூறியிருப்பதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ் நாடு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதினை நட்சத்திரம் நகர்கிறது படத்திற்காக நடிகை துஷாரா விஜயன் தேர்வாகியுள்ளார்.

இந்த விருது குறித்து நடிகை துஷாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2014 முதல் 2022 வரையிலான திரைப்படங்கள் மற்றும் சின்ன திரைக்கான விருதுகளை தமிழக அரசு நேற்றிரவு (ஜன.29) அறிவித்தது.

இதில், 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதினை நட்சத்திரம் நகர்கிறது படத்திற்காக நடிகை துஷாரா விஜயன் தேர்வாகியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தில் துஷாரா விஜயன் ’ரெனே’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தும் அந்தப் படத்துக்காக அவர் விருது பெறாததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இதயம் முழுவதும் மிகுந்த நன்றியுடன் தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை நட்சத்திரம் நகர்கிறது (2022) படத்திற்காகப் பெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். எனது கனவை வளர்த்த, எனது கலையை மெருகேற்றிய தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டுள்ளதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

என் மனதுக்கு நெருக்கமான சார்பட்டா பரம்பரை படத்துக்கும் விருது கிடைத்துள்ளதற்கு சமமாக மகிழ்கிறேன். இவையெல்லாம் எதுவும் என்னுடைய தனிப்பட்ட பயணமல்ல. சினிமா மீதான நம்பிக்கை, காதல், உண்மை என அனைவரது கூட்டு முயற்சிகளால் உருவானவை.

எனது படத்தின் எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விருது தேர்வாளர்கள், கலைஞர்கள், துணை நடிகர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள்.

நீங்கள் அளித்த இடத்தில்தான் நான் வளர்ந்துள்ளேன். என்னுடன் விருது வென்றவர்களது செயல்பாடுகள், சவால்கள்கள்தான் சினிமா ஏன் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள்.

இது முடிவல்ல. மேலும் நமது வேருடன் இருக்கவும் தொடர்ந்து பயணிக்கவும் இந்த விருது ஞாபகப்படுத்தும். அன்புடன் துஷாரா விஜயன் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள இவரது காட்டாளன் என்ற திரைப்படம் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

Actress Dushara Vijayan has been selected for the Tamil Nadu State Government's Special Award for Best Actress for the film 'Natchathiram Nagargirathu'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

ம.பி.யில் எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம்? சுற்றுலாத் துறை செயலர்!

அதெல்லாம் பழைய செய்தி! EPS பேச்சுக்கு OPS பதில்!

இடைக்கால பட்ஜெட்: பிப். 5ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

SCROLL FOR NEXT