காத்திருப்புக்குத் தகுதியானது... கருப்பைப் பாராட்டிய சாய் அபயங்கர்!
கருப்பு குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர்...
கருப்பு திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது.
ஆனால், சில வணிக காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. டீசர் மற்றும் பாடல் கொடுத்த எதிர்பார்ப்புக்கு படம் வெளியாகியிருந்தால் வரவேற்பு கிடைத்திருக்கலாம். இதனால், சூர்யா ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இப்போதுதான் கருப்பு திரைப்படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்தேன். காத்திருப்புக்குத் மிகத் தகுதியானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கருப்பு திரைப்படத்தை ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.