முகப்பு
செய்திகள்

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது!

ஏஐ-ல் உருவாகும் படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது...

பகிர்:

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடையாது என ஆஸ்கர் அகாதெமி அறிவித்துள்ளது.

திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். ஒருமுறை ஆஸ்கர் வாங்கினாலே உலகளவில் கவனம் கிடைக்கும் என்பதால் அந்த விருதைப் பெற பல திரைப்படங்கள் போட்டியிடும்.

தற்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நடிகர்களின் தேவையில்லாமலே அவர்களைப் போன்ற தத்ரூபமான தோற்றத்தை ஏஐ உதவியால் நடிக்க வைக்க முடிகிறது. மேலும், கதையையும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுலபமாக்க முடிகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இனி ஏஐ-யால் உருவாகப்படும் நடிகர்கள், கதை - திரைக்கதைகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படாது என அகாதெமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், ஏஐ உதவியால் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலுக்கும் செல்லாது எனத் தெரிகிறது.

The Oscar Academy has announced that there will be no Oscars for AI films.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments