நியூஸ் ரீல்

மல்யுத்த வீரர் ரோலில் அமீர்கான்!

DIN

ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரரான மஹாவீர் சிங்கின்  வாழ்க்கை தழுவலாக உருவாகி வரும் படம் "தங்கல்'. மஹாவீர் சிங் ரோலில் அமீர்கான் நடிக்கிறார். பாலிவுட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இப்படம், இதுவரை வந்த அமீர்கான் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் என்ற சிறப்பைப் பெறுகிறது. டிசம்பர் 23-ஆம் தேதி படம் வெளியாகிறது.  "தங்கல்' என்றால் மல்யுத்தம் என்று அர்த்தம். ஆனால், அதன் சரியான உச்சரிப்பு டங்கல் தான். ஹிந்தியில் "டங்கல்...டங்கல்' என ஒரு பாடலும் இருக்கிறது. அது தமிழில் "யுத்தம்.. யுத்தம்' என மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக விரைவில் தமிழகத்துக்கு வர இருக்கிறார் அமீர்கான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT