நியூஸ் ரீல்

ஐரோப்பாவில் விஜய் 61!

DIN

"பைரவா' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்கி வருகிறார். விஜய் நடிப்பில் 61-ஆவது படமாக இது உருவாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாமல் படப்பிடிப்பு துவங்கியுள்ள இப்படத்தை இராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 வதுபடமாக தயாரிக்கிறது. சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜோதிகா நடிப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜோதிகா நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார். "பைரவா' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சண்டைப் பயிற்சி இயக்குநராக அனல் அரசு பணியாற்றவுள்ளார். முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த  1-ஆம் தேதி சென்னையில் துவங்கியுள்ளது. சில முக்கிய காட்சிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாகவுள்ளது. விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். வரும் தீபாவளி பண்டிகைக்கு படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT