நியூஸ் ரீல்

மீண்டும் ஷகீலா: நடிகை ஷகீலாவின் பயோபிக் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு

ராம்கி

மலையாள நடிகை என்றாலும், மொழிகள் கடந்து தனது கிளாமர் நடிப்பினால் பெரும் புகழ் பெற்றவர் ஷகீலா. தொண்ணூறுகளில் தொடங்கிய அவரது திரை வாழ்க்கை இன்று வரை தங்கு தடையில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. 'கிண்ணாரத் தும்பிகள்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த போது அவரின் புகழ் உச்சத்தை அடைந்தது. ஷகீலாவின் படங்கள் திரையிடப்படும் சமயத்தில் சூப்பர் ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் கூட, அதைத் தாண்டி ஓடி வசூல் சாதனை புரிந்ததுள்ளது.

ஷகீலாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக இயக்கி வருகிறார் இந்திரஜித் லங்கேஷ். பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சில்க் ஸ்மிதா, சஞ்சய் தத் என அதிகம் சர்ச்சையில் சிக்கிய நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் விதமாக பாலிவுட்டில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருவது ட்ரெண்டாகி வருகின்றது. அந்த வரிசையில், இன்னும் பெயரிடப்படாத படமான ஷகீலாவின் பயோபிக்கும் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கர்னாடகத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிச்சாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய கதாபாத்திரத்தைப் மெருகேற்ற ஷகீலாவை நேரில் சந்துத்து பேசியுள்ளார் ரிச்சா சத்தா. அவர் இப்படம் குறித்து கூறுகையில், ‘இந்த படத்தில் உண்மையிலேயே எனக்கு கடினமான கதாபாத்திரம்தான். காரணம் ஷகீலாவின் இளம் வயதிலிருந்து தொடங்கும் கதை இது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பின்பற்றுவது சவாலாக இருந்தது. அவரின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் நடிக்கிறேன்’ என்றார்.

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளை ஷகீலாவின் காதலராக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜுன். இந்த பயோபிக்கின் மூலம் ரசிகர்களிடையே மீண்டும் ஷகீலா பாப்புலராகி வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் ஷகிலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

தோட்டத்தில் விளையாடச் சென்ற போது விபரீதம் -கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT