நியூஸ் ரீல்

கணவரா, மாமனாரா யார் பெஸ்ட்? மார்க் போடுகிறார் சமந்தா!

நடிகர் சமந்தா அக்னினேனி தனது மாமனார் நாகார்ஜூனாதான் குடும்பத்தில் உடலை நன்கு பராமரிப்பவர்.

சினேகா

தம் குடும்பத்தில் உடலை நன்கு பராமரிப்பவர் மாமனார் நாகார்ஜூனாதான் என்று சமந்தா அக்கினேனி அண்மையில் ஒரு பேட்டியில் சமந்தா கூறினார். உடற்பயிற்சி குறித்து சில விவரங்களைப் பகிர்ந்து கொண்ட சமந்தா, தனது மாமனார் நாகார்ஜூனா குறித்து கூறியது, 'அவர் தனது தோற்றத்தில் கவனம் செலுத்துபவர், உடலை சிறப்பாக பராமரித்துக் கொள்வார். சரியான விகிதத்தில் உடற்பயிற்சிகளை செய்கிறவர் அவர். பார்த்தால் நம்ப முடியாது, இந்த ஆண்டு அவருக்கு 60-வது பிறந்த நாள் வரப் போகிறது.  

அவர் எப்போதும் அந்தந்த வேலையை அந்தந்த நேரத்தில் சரியாகச் செய்யக் கூடியவர். உண்மையில் சிறந்த முன்மாதிரியாக அவர் திகழ்கிறார். சாப்பிடும் உணவு மற்றும் அவர் செயல்படும் வழிகள் அனைத்துமே தனிச் சிறப்பானவை’ என நாகர்ஜுனா பற்றி சமந்தா கூறினார். 

அடுத்து தனது கணவர் நாக சைதன்யாவைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'எங்கள் குடும்பத்தில் அடுத்த ஃபிட்டெஸ்ட் நபர் என் கணவர்தான். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அதிகப்படியாகவே கவனமாக இருப்பவர். சாலட் விரும்பி சாப்பிடுவார். அதிகம் நார்ச் சத்துள்ள உணவு பொருட்களை மட்டுமே சாப்பிடுவார், மேலும் தனது டயட்டிலிருந்து கவனத்தை மாற்ற மாட்டார், அது நல்லதுதான் என்றாலும், அது சில நேரங்களில் எரிச்சலூட்டும்,’ என்று சமந்தா கூறினார்.

தனது உடற்பயிற்சிகளைப் பற்றி சமந்தா கூறுகையில், நான் தொடர்ந்து உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன், நன்றாக வியர்க்கும் வரை ஜிம் வொர்க் அவுட்ஸ் செய்வேன். சரியான உணவைச் சாப்பிடுவதும், உடற்பயிற்சியை விடாமல் செய்வதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் உதவுகிறது. உணவைப் பொருத்தவரைக்கும் புரதச் சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுவேன்’ என்றார் சமந்தா. தெலுங்கானா ஸ்பைஸ் கிச்சன் தனது விருப்பமான உணவகம் என்றவர் 'ரங்கஸ்தலம்' படப்பிடிப்பில் சில அற்புதமான உணவு வகைகளை சாப்பிட்டதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை: ரிசா்வ் வங்கி

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

SCROLL FOR NEXT