நியூஸ் ரீல்

புதுப்புது படங்களுடன் அடுத்த ரவுண்டுக்கு ரெடியான த்ரிஷா!

எங்கேயும் எப்போதும் பட புகழ் சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் ‘ராங்கி’.

சினேகா

எங்கேயும் எப்போதும் பட புகழ் சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் ‘ராங்கி’. இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் இது.

அண்மை காலங்களில் நயன்தாரா, த்ரிஷா ஆகிய இருவரும் ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளில் நடித்து வருகிறார்கள். த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படம் பெரும் வெற்றி பெற்றதுடன் அவர் ஏற்று நடித்திருந்த ஜானு எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

த்ரிஷா ராங்கி படம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் படத்தின் பெயர் எழுதப்பட்ட க்ளாப் போர்டை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில், த்ரிஷா ஹிந்தி படமொன்றின் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கோலிவுட்டில் நிலவுகிறது. ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லரான அந்தாதூன் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாகவும் அதில் த்ரிஷாவை நடிக்க கேட்டுள்ளனர் என்ற தகவல்தான் அது. ஆனால் த்ரிஷா தரப்பினர் இதை மறுத்துள்ளனர்.

ஆனால் அண்மையில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பாட்லா’ படத்தின் ரீமேக்கில் த்ரிஷா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. த்ரிஷாவுக்காக பாட்லா படத்தின் ஸ்பெஷல் திரையிடல் கடந்த மாதம் நடந்துள்ளது என்கிறது படக்குழு. பாட்லா படம் ஸ்பானிஷ் படமான ‘தி இன்விஸிபிள் கெஸ்ட்’ எனும் வெற்றிப் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஐகே வெளியீடு ஒத்திவைப்பு!

பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு: சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தும் திட்டமில்லை! -அஸ்ஸாம் முதல்வர்

பங்குச் சந்தை மூன்றாவது நாளாக உயர்வு: 25,000 புள்ளிகளை மீண்டும் கடந்தத நிஃப்டி!

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

SCROLL FOR NEXT