நியூஸ் ரீல்

நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது

DIN

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'காதல் முன்னேற்ற கழகம்'. ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், 'நாதஸ்வரம்' முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை மாணிக் சத்யா இயக்குகிறார். 'இந்தப் படம் 85-களில் நடக்கின்ற கதை. நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர் பிரித்விராஜன். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர். துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்..

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது... அதைத்தான் இதில் சொல்லி இருக்கிறோம். எதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம். நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம். சென்னை, ஊட்டி, கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது'' என்றார் இயக்குநர். ஒளிப்பதிவு - ஹாரிஸ் கிருஷ்ணன். இசை - பி.சி.சிவன். பாடல்கள் - யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம். கலை - பிரகதீஸ்வரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT