ஸ்பெஷல்

தி லயன் கிங்

காட்டை விட்டு ஓடிவிடும் சிம்பா வளர்ந்து மீண்டும் வந்து ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பதே கதை

எம். ஆனந்த்

முபாஸா என்னும் சிங்கம் காட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறது. அதன் வாரிசான சிம்பா காட்டின் அடுத்த அரசனாக அறிவிக்கப்படுவதை விரும்பிடாத முபாஸாவின் தம்பியான ஸ்கார் சூழ்ச்சி செய்து முபாஸாவைக் கொன்றுவிட்டு அதற்கு சிம்பாவை காரணம் காட்டி ராஜ்ஜியத்தைக் கைபற்றுகிறது. இதனால் காட்டை விட்டு ஓடிவிடும் சிம்பா வளர்ந்து மீண்டும் வந்து ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பதே கதை.

உலகம் முழுக்க குழந்தைகளால் அதிக முறை கேட்கப்பட்டு பார்க்கப்பட்ட கதை தான். அதை மீண்டும் இக்கால தொழில்நுட்பத்தில் கொண்டு வந்திருப்பதும் சிங்கங்களின் தலைமுடிகள் காற்றில் அசைவதை துல்லியமாக காட்டியிருப்பது மிகச் சிறப்பு.  தமிழில் மதன் கார்க்கியின் வசனங்கள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. வில்லன் ஸ்கார்ராக அரவிந்த்சாமியின் குரல் மிரட்டியுள்ளது. சிம்பாவாக நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருப்பதும், பாடல் காட்சியில் அவரே பாடியிருப்பதும் அருமை. காமெடிக் கதாபாத்திரத்தில் டிமோனாக நடிகர் சிங்கம் புலியும், பும்பாவாக ரோபோ சங்கரும் குரல் கொடுத்திறுப்பது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் ரசிக்க வைத்துள்ளது. மரங்கொத்திப் பறவையாக மனோபாலாவின் குரல் மற்றும் அவருக்கே ஏற்ற பாணியில் நகைச்சுவை என்பது தனிச் சிறப்பு.
  

குறைகள்

படத்தின் கால அவகாசம் குறைவு. சில காட்சிகளை சற்று விரிவாக எடுத்திருக்கலாம். 
 
பாடல்களில் பாடகர்களின் குரல்கள் சற்று சொதப்பல்.

வசனங்கள் சில இடங்களில் ஆங்கில வார்த்தை பேசியிருப்பது முகம் சுழிக்க வைக்கிறது.

பல தியேட்டர்களில் ஃபுல்ஸ்கிரீன் வியு இல்லாதது லேப்டாப்பில் படம் பார்ப்பதைப் போன்ற அனுபவத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

மொத்தத்தில் 90-ஸ் கிட்ஸ்களின் குழந்தை தனத்தை மீண்டும் ஒரு முறை எட்டிப்பார்க்க வைத்த ஒரு படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT