தமிழக சட்டப்பேரவை 
தினமணி 85

‘யானை தெரியவில்லை; கடுகு தெரிகிறது’

டாக்டர் ஜான்சன் அவர்கள் ஒருமுறை இங்கிலாந்து பேரறிவாளர்கள் மத்தியில் ஒன்றரை மணி நேரம் பேசி முடித்த பின் கேட்டார்கள். "இந்த சொற்பொழிவிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?' என்று.

DIN

1968 ஆகஸ்ட் 26: தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம்
 

க.ந. ராமச்சந்திரன்: டாக்டர் ஜான்சன் அவர்கள் ஒருமுறை இங்கிலாந்து பேரறிவாளர்கள் மத்தியில் ஒன்றரை மணி நேரம் பேசி முடித்த பின் கேட்டார்கள். "இந்த சொற்பொழிவிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?' என்று. அவர்கள் ஒன்றும் புரியாமல் பேந்தப் பேந்த முழித்தார்கள். அப்போது ஜான்சன் அவர்கள் சொன்னார்கள், "I can give explanation. but i cannot give understanding' என்று.

அதாவது, "நான் விளக்கம் தர முடியுமே தவிர, புரிந்துகொள்ளும் புத்தியைத் தரமுடியாது'' என்றாராம்.

அதேபோல இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சியில், முதலமைச்சர் அவர்கள் பல விளக்கங்களை எடுத்துத் தெரிவித்திருக்கிறார்கள். 

விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்குக் காங்கிரஸ்காரர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. அவர்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், பலமுறை சட்டசபைகளிலும் பார்லிமெண்டிலும் பதவி வகித்தவர்கள். அவர்களுக்கு விளங்கவில்லை என்று சொல்ல முடியாது.

விளங்கியும் விளங்காததுபோல இருக்கிறார்கள். கடுகு கீழே கிடப்பது தெரிகிறது; ஆனால் யானையின் காலிலே போய் மோதிக்கொள்கிறார்கள். ஏன் ஐயா மோதிக் கொள்கிறீர்கள்? என்று கேட்டால், "எனக்கு வெள்ளெழுத்து'' என்று சொல்கிறார்கள். யானை தெரியவில்லை; கடுகு தெரிகிறது என்கிறார்கள்.

(1968ஆம் ஆண்டு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்த இந்தத் தொகுப்பு 4.2.1993 தினமணியில் வெளியானது).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT