தினமணி 85

ஏ.என்.எஸ்ஸின் பெருந்தன்மை

ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் நேரடிப் பார்வையில் அவரது கட்டுரைகள் மற்றும் அன்றைய தலையங்கம்

DIN

நான் 1982-ஆம் ஆண்டு தினமணியில் புரூப் ரீடராகப் பணியில் சேர்ந்த சில மாதங்களில் ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் நேரடிப் பார்வையில் அவரது கட்டுரைகள் மற்றும் அன்றைய தலையங்கம் பகுதிகளை படித்துக் கொடுக்கும் பணி எனக்கு தரப்பட்டது. இராக் - ஈரான் போர் தொடர்பாக ஏ.என்.எஸ். எழுதிய கட்டுரை அடுத்த நாள் வெளிவந்தது. அந்த கட்டுரையில் "எண்ணெய் துரப்பணக்கருவி' என்ற சொல்லுக்கான ஆங்கில வார்த்தை oil rig என்பதற்கு பதிலாக oil jig என்று பிரசுரமாகிவிட்டது. 

அலுவலகம் வந்த ஏ.என்.எஸ். என்னிடம், "எப்படி இந்த தவறு வந்தது'' என்று கேட்டார். நான் அவரிடம், "உங்கள் கையெழுத்து புரியவில்லை'' என்றேன். அதற்கு அவர், "உனக்கு சந்தேகமாயிருந்தால் என்னை கேட்டிருக்கலாம். நான் என்ன புலியா? சிங்கமா? பயப்படுவதற்கு'' என்று கூறி என்னைச் செல்லமாக கடிந்துகொண்டார். 

மறுநாள் அது தொடர்பான ஒரு விளக்கம் பிரசுரமானது. அதில் அவர், "நேற்றைய கட்டுரையில் oil rig என்பது oil jig என்று தவறுதலாக வந்துவிட்டது. அதற்கு என் கையெழுத்தின் கோளாறே காரணம்' என்று குறிப்பிட்டிருந்தார். தவறு என்னுடையதுதான் என்றாலும் அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டது என்னை நெகிழவைத்துவிட்டது. அன்று முதல் நான் அவருடைய கட்டுரைகளை கவனத்துடன் படிக்கத் தொடங்கினேன். அவரும் என்னிடம், ""சிவராமன் ஒன்றும் அதிமேதாவியில்லை. நான் எழுதியதில் ஏதாவது தவறு இருப்பதாக உறுதியாகத் தெரிந்தால் அதை மாற்றுவதற்கு உனக்கு மட்டுமல்ல, ஆசிரியர் குழுவில் உள்ள எல்லோருக்கும் உரிமையுண்டு'' என்று சொன்னார். 

- ஜெ.ராகவன், சென்னை - 61.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT