1950-களில் பள்ளிக் காலம் முதலே தினமணியைப் படித்து வருகிறேன். தினமணி தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை அதன் தரம் குறையவில்லை. சுதேசமித்திரனின் தாக்கத்தை தினமணியில் காணலாம். சுதேசமித்திரனுக்கு உள்ள பாரம்பரியம் தினமணிக்கும் உண்டு. தமிழ் மொழியை கொச்சைப்படுத்தாமல் ஆங்கிலக் கலப்பின்றி மக்கள் படிக்கக்கூடிய தமிழில் தினமணி மட்டும்தான் இருக்கிறது. அது பாராட்டுக்குரிய விஷயம். தமிழக்கு தனி முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகை.
அடுத்ததாக தினமணியின் கட்டுரைகள். தமிழில் தரமான கட்டுரைகளை தரக்கூடிய ஒரே பத்திரிகை தினமணிதான். சுதந்திரப் போராட்டத்தில் தினமணிக்கு முக்கியப் பங்கு உண்டு. அரசியல் விமர்சனங்களை தினமணி தெளிவாக வைக்கிறது. நெருக்கடி நிலை காலத்தில் சர்வாதிகாரத்தை எதிர்த்து தினமணி பெரும் போராட்டமே நடத்தியது. ஜனநாயக மரபை தூக்கிப் பிடித்த பெருமைக்குரிய பத்திரிகை தினமணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.