முகப்பு
கட்டுரைகள்

சேமமுற வேண்டுமெனில்...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தமிழைப்  பாதுகாப்பதும், வளர்ப்பதும், கட்டிக்காப்பதும் ஏதோ தமிழறிஞர்களுக்கு மட்டுமே உள்ள கடமையாகவும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மட்டுமே இத

கட்டுரைகள்

சேமமுற வேண்டுமெனில்...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தமிழைப்  பாதுகாப்பதும், வளர்ப்பதும், கட்டிக்காப்பதும் ஏதோ தமிழறிஞர்களுக்கு மட்டுமே உள்ள கடமையாகவும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மட்டுமே இத

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:26 PM
பகிர்:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தமிழைப்  பாதுகாப்பதும், வளர்ப்பதும், கட்டிக்காப்பதும் ஏதோ தமிழறிஞர்களுக்கு மட்டுமே உள்ள கடமையாகவும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற எண்ணமும் இன்று பலரின் மனதில் மேலோங்கிவிட்டது.

திரைத்துறையில் அன்று இருந்த முன்னோடிகள் தமிழை வளர்ப்பதில் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டனர். திரை உரையாடல்களில் பிற மொழிகளைக் கலந்து பேசி வந்த நிலையை மாற்றி, உரையாடல்கள் மட்டுமன்றி, பாடல்களிலும் தூய தமிழைக் கையாண்டனர்.

இந்த நிலையில், இன்று உரையாடல்கள், பாடல்கள் அனைத்திலும் பல மொழிகளைக் கலந்து திணிப்பதன் மூலம் மிகவும் பிற்போக்குத்தனமான சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, வட்டார மொழி வழக்கு எனக் கூறிக்கொண்டு, தமிழ்மொழியை சேற்றில் தள்ளி,  தமிழ் மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்ற ஏமாற்று வார்த்தைகள் வேறு.

திரைக் கவிஞர்கள் குறித்து கூறவே வேண்டாம். "மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம், முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்' என்று பல்லவிக்கும், சந்தத்துக்கும் பாட்டெழுதியபோதுகூட கண்ணதாசன் போன்றவர்கள் தமிழை உயிராக நினைத்தார்கள். இப்போதுள்ள நிலையை ஊரே சொல்லட்டும்...!

இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பீடிகை. மாநாட்டு ஆய்வரங்கில் பங்கேற்று கட்டுரை அளிக்க வேண்டுமா, கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சிச் சிந்தனைகளைக் கொட்டித் தீர்க்க வேண்டுமா? அது அவர்களின் விருப்பம், தனித்திறனைப் பொருத்தது.

ஆனால், அவர்களால் இயன்றும் செய்யாமல் விட்டது ஒன்று உண்டு. அது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து நம் தெருக்களில் சென்று முழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தாதது.

தேர்தலாகட்டும், போராட்டங்களாகட்டும், வியாபார ரீதியிலான விளம்பரங்களாகட்டும்  திரை நட்சத்திரங்கள் தோன்றினால், அந்தக் கருத்து உடனடியாக பாமரனைச் சென்று சேர்ந்துவிடுகிறது.

இதுபோன்றதொரு நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது, யார், யாரெல்லாம் இதில் பங்கேற்கப் போகிறார்கள், அவர்கள் இந்த மாநாட்டில் பேசப்போவது என்ன, இதனால் விளையப்போகும் நன்மை என்ன, இவை குறித்தெல்லாம் விளிம்பு நிலை தமிழர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை திரைத் துறையினருக்கும் உண்டல்லவா?

அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தங்கள் துறையில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு குழுவை அமைத்து தமிழக முதல்வர், மாநாட்டுத் தலைவர் ஆகியோரிடம் சென்று மாநாடு குறித்த விழிப்புணர்வுப் பணியை தங்கள் துறையினருக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டிருக்க வேண்டும்.

அவர்களின் அனுமதியைப் பெற்று, தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம்  சென்று மாநாடு குறித்து விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாததன் மூலம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பணியாற்றக் கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர்கள் அலட்சியப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் முன்னேற்றமே எங்களின் உயிர் மூச்சு என்று பறைசாற்றிக் கொண்ட பல அரசியல் கட்சிகளும், பிரமுகர்களும் அந்த வார்த்தைகள் எவ்வளவு செயற்கையானவை என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்திருக்கின்றனர்.

மாநாட்டுப் பணிகளை அரசு செய்தால், மற்றவர்கள் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைக்கூடவா செய்ய முடியாது?

தேர்தல் கூட்டணி என்றால், "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை' என்ற இலக்கணத்தை வகுத்துச் செயல்படும் இவர்கள்,  அன்னைத் தமிழுக்காக நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளவும்,  நம் வீட்டு விருந்துக்கு வந்த அயல் சொந்தங்களை வரவேற்கவும் முடியாமல் போனது ஏனோ?

அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள தமிழுணர்வாளர்கள், விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டிருக்கலாமே? அவர்களின் தலையாய பணி என்னவோ?

தங்களின் தேவைகளுக்காக போராட்டம் நடத்தத் தயங்காத ஆசிரியர்கள்,  மறந்தும் மாநாடு தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்த முனையவில்லை.

தெருமுனை பிரசாரமாக, வாயில் கூட்டமாக, பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கமாக நடத்தியிருக்க வேண்டாமா? எத்தனை ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டார்கள். எத்தனை மாணவர்களுக்கு மாநாட்டில் என்னென்ன அமர்வுகள் நடைபெறுகின்றன, எங்கிருந்தெல்லாம் தமிழறிஞர்கள் வந்திருக்கிறார்கள், அவர்கள் எந்தெந்த தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்க உள்ளனர் என்பது தெரியும்?  

மொத்தத்தில் தமிழின் தொன்மையைப் பறைசாற்றவும், அதை உய்விக்கவும் அயல் வாழ் தமிழர்கள் எல்லாம் தமிழகத்தில் திரண்டிருக்கும் போது, உள்ளூரில் ஒரு சாரார் பெருத்த மெüனத்தில் இருக்கிறோம்.

நாம் சேமமுற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்ற எட்டயபுரத்தானின் வாக்கினை இந்த நேரத்தில் நினைவில் கொள்வது நல்லது...

முழு கட்டுரையைப் படிக்க →