அண்ணா ஹஸôரே இயக்கம் வெற்றி பெறுமா?
நேற்று வரை அரசியலில் அண்ணா என்றால் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்றும், சி.என்.ஏ. என்றும், அறிஞர் அண்ணா என்றும் அழைக்கப்பட்ட ஒரு மாமனிதர் என்றுதான் நாம் புரிந்து கொண்டோம். இன்று ""அண்ணா'' என்றால்
கட்டுரைகள்அண்ணா ஹஸôரே இயக்கம் வெற்றி பெறுமா?
நேற்று வரை அரசியலில் அண்ணா என்றால் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்றும், சி.என்.ஏ. என்றும், அறிஞர் அண்ணா என்றும் அழைக்கப்பட்ட ஒரு மாமனிதர் என்றுதான் நாம் புரிந்து கொண்டோம். இன்று ""அண்ணா'' என்றால்
நேற்று வரை அரசியலில் அண்ணா என்றால் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்றும், சி.என்.ஏ. என்றும், அறிஞர் அண்ணா என்றும் அழைக்கப்பட்ட ஒரு மாமனிதர் என்றுதான் நாம் புரிந்து கொண்டோம்.
இன்று ""அண்ணா'' என்றால்
அண்ணா ஹஸôரேதான். மராட்டியிலும் தமிழிலும் அண்ணாவுக்கு ஒரே அர்த்தமே. ஹஸôரே என்ற பெயருள்ளவரை மராட்டியர்கள் அன்புடன்
""அண்ணா ஹஸôரே'' என்கிறார்கள்.
இந்திய அரசியலில் ஊழல் ஜுரம் 105 டிகிரி வேகத்தில் ஏறியுள்ள 2011-ம் ஆண்டில் ஒரு நாள் தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் காந்திக் குல்லாய் அணிந்து கொண்டு, மகாத்மா காந்தியே மறு அவதாரம் எடுத்தது போல், லால்பகதூர் சாஸ்திரியை நினைவுபடுத்தும் அண்ணா ஹஸôரே, ""லோக்பால் சட்டம் இயற்றி ஊழல் பேர்வழிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்'' என்ற கோரிக்கையுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தன் சகாக்களுடன் அமர்ந்துவிட்டார்.
""பிரஷ்டாச்சார் மிட்டாயேங்கே'' என்ற கோஷம் விண்ணைத் தொட்டது. ""ஊழலை ஒழிப்போம்'' என்பதுதான் குரல். அவ்வளவுதான். திமுதிமுவென்று அலை அலையாய் மக்கள் கூட்டம் ஜந்தர் மந்தரைத் திணற அடித்து, ""ஊழல் பேர்வழிகளை வெட்டு, தூக்கிலிடு'' என்ற வன்குரல், மென்குரலுக்கு மேல் ஒலித்தது. அணியணியாக மாணவர்கள் வந்தார்கள். அண்ணா ஹஸôரேயைப் பின்பற்றி மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களிலும் சிறு நகரங்களிலும் ஹஸôரேவுக்கு ஆதரவு தெரிவித்து ""ஊழலை ஒழிப்போம்'' என்ற குரலுடன் சத்தியாக்கிரகப் போரை ஊக்குவித்து அமர்ந்துவிட்டனர்.
சென்னையில் நரேஷ் குப்தா. தில்லியில் கிரண்பேடி ஹஸôரேயுடன் அமர்ந்திருந்தார். சுவாமிகள் அக்னிவேஷ், பதஞ்சலி யோக மகராஜ் ராம்தேவ் உடன் காணப்பட்டனர்.
இந்த விஷயத்தில் ராம்தேவின் ""பாரதிய ஸ்வாபிமான் யாத்ரா'' மூலம் கடந்த ஓரிரு மாதங்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் ராம்தேவ் நிகழ்த்திய ஊழல் எதிர்ப்பு - கருப்புப் பண ஒழிப்புப் பிரசாரம் ஹஸôரேவுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ""பகுத்தறிவுப் பாசறை'' என்றும், ""சுயமரியாதை சுயம்பு'' என்றும் போற்றப்படும் தலைவரும், அறிஞர் அண்ணாவின் தம்பிகளும் "தெய்வம் இல்லை' என்று கூறிவிட்டு "அங்கெங்கினாதபடி எங்கும் பிரகாசமாகி ஆனந்த பூர்த்தியாகி அறிவொடு நிற்கும் ஊழல் தெய்வத்தைப் போற்றி ஊழலையே தெய்வமாக்கும்போது, ""தெய்வமே இது பொறுக்காதடா'' என்று இன்று காவியுடை தரித்தவர்களும் ஹஸôரே இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து சாது சமாஜ குருமார்களும் அண்ணா ஹஸôரேவுக்கு பக்கபலமாயுள்ளனர். மக்களால் பெரிதும் போற்றப்படும் ரவிசங்கர் சுவாமிகளும் களத்தில் உள்ளார். மதச்சார்பு இல்லாத கல்வியாளர்களும், அறிவுஜீவிகளும், ஏராளமான தொண்டு நிறுவனங்களும், சமூக முன்னேற்ற ஆதரவாளர்களும் களத்தில் உள்ளனர். மேதாபட்கரும் களத்தில் உள்ளார்.
நாடே வியக்கும் வண்ணம் இரண்டே நாள்களில் நிகழ்ந்த பேரெழுச்சியால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங் பதறிப் போனார். ஹஸôரேயின் கோரிக்கைகளை அப்படியே நிபந்தனையின்றி ஏற்பதாகக் கூறி ஹஸôரேயின் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
ஆனால், இப்போது லோக்பால் சட்ட வரைவுப் பணியும் தொடங்கிவிட்டது. ""ஊழல் எங்கள் பிறப்புரிமை'' என்ற கருத்தில் லோக்பால் சட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்யும் முயற்சியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, பின்புல வேலையில் இறங்கிவிட்டது.
அண்ணா ஹஸôரே அப்பழுக்கற்ற தியாகி. தேசப்பற்று மிகுந்தவர். காந்தியைப் போல் வாழ்ந்து காட்டியவர். கையில் சல்லிக் காசு கிடையாது. மாடு, மனை, குடும்பம், பாச உறவு எதுவும் இல்லாதவர். மகாராஷ்டிர மாநிலத்தில் இவர் உருவாக்கிய ராலிகான் சித்திக் என்ற கிராமம் - மகாத்மா காந்தி கண்டகனவை நனவாக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து ஹிவரே பசார் என்ற கிராமம். சுயதேவைப் பூர்த்தி மட்டுமல்ல, வருமானத்திலும் உயர்வு. ஒப்பற்ற நீர் நிர்வாகத் திட்டம். நகரத்துக்குப் பிழைப்பைத் தேடிச் சென்ற கிராம மக்கள் மீண்டும் கிராமத்துக்கு வந்து வசதியாக வாழும் நிலை. நாடு நலம்பெற நல்ல நல்ல திட்டங்களை உருவாக்கி கிராமங்களை வளமாக்கிய நடமாடும் காந்தி, ஒரே நாளில் ஒரே சொல்லில் உலகமே வியக்கும் அளவில் இவர் செய்துள்ள சாதனையை வீணாக்கலாமா? காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு குள்ள நரிக் கூட்டம் பல கள்ளத்தனமான வேலைகளில் இறங்கிவிட்டது. நல்ல மனிதர் மீது சேற்றை வாரி இறைப்பதைப் பார்க்கலாம். ""இவர் விரலை அசைத்தால் இந்தியாவே ஆடும்'' என்ற உண்மையை மதி கெட்டவர்கள் மறந்துவிட்டனர் போலும்!
நாற்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட ஜன் லோக்பால் மசோதா அதாவது மக்கள் மன்ற தண்டனைச் சட்ட மசோதா இன்று புத்துருவம் பெற்று வருகிறது. இப்படிப்பட்ட சட்ட முன்வரைவைச் செய்ய மக்கள் சமூகத்தின் சார்பாக ஹஸôரேயுடன், ஹஸôரேவுக்கு நெருக்கமான அரவிந்த் கெஜ்ரிவால், சட்ட நிபுணர் சாந்தி பூஷண், சந்தோஷ் ஹெக்டே, பிரஷாந்த் பூஷண் ஆகியோர் ஒரு தரப்பிலும், நாடாளுமன்றத்தின் சார்பில் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகிய ஐந்து மத்திய அமைச்சர்கள் ஒரு தரப்பிலும் ஆக மொத்தம் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழு உருவாகியுள்ளது. இதற்கு பிராணாப் முகர்ஜி தலைவர். சாந்திபூஷண் இணைத் தலைவர்.
ஒரு கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்திக்கு எதிராக "இளந்துருக்கியர்' என்று பெயர் பெற்ற சாந்திபூஷண், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் எல்லோரும் ஊழலுக்கு எதிராக அன்றே குரல் கொடுத்தவர்கள். ஹஸôரே இந்தச் சட்டத்தை ஓட்டையில்லாமல் சிறப்புடன் வரைய சட்ட நிபுணர்களான சாந்திபூஷணையும் சாந்திபூஷணின் புதல்வர் பிரஷாந்த் பூஷணையும் நம்பியுள்ளார். காரணம், நாடாளுமன்றத்தின் சார்பாக லோக்பால் சட்டம் வரைய நியமிக்கப்பட்ட குழுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், கபில் சிபல் ஆகிய மூவரும் கெட்டிக்கார வக்கீல்கள்.
சட்டத்தை வரையும் போதே குற்றவாளிகள் தப்பிக்க வழிசெய்யும் ஓட்டைகளைப் போடுவதில் வல்லவர்கள். இதை நிரூபிக்கும் வகையில் ஓட்டை வாயர் கபில் சிபல், ""லோக்பால் சட்டம் மூலம் ஊழல் ஒழியாது'' என்று திருவாய் மலர்ந்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சிக்குச் சோதனையாக இருப்பவர்கள் சாந்திபூஷணும், பிரசாந்த் பூஷணும் ஆவார்கள். மக்கள் சமூகப் பிரதிநிதிகளில் இவர்கள் இருவருக்குமே முகர்ஜி - சிதம்பரம் - சிபல் ஆகிய மும்மூர்த்திகளின் தில்லுமுல்லுகளைக் கண்டுபிடிக்கும் திறன் உண்டு என்பதற்காகவே சாந்திபூஷண் மீது அவதூறுகளும் பொய்க் குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுகின்றன.
1974-ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்த ""முழுப்புரட்சி இயக்கம்'' என்ற அறைகூவல் இந்திரா காந்தியைப் பதவியை விட்டு இறக்கியது. பின்பு மொரார்ஜி தேசாய் பிரதமரான காலத்தில் ஜன் லோக்பால் சட்டம் வரைவு செய்யப்பட்டாலும் காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்டது.
அப்போதே அமைச்சராயிருந்த சாந்திபூஷண் மேற்படி சட்ட வடிவாக்கத்தில் பங்கு வகித்த காரணத்தால், ஹஸôரேயின் நம்பிக்கைக்கு சாந்திபூஷண் பாத்திரமாகியுள்ளார்.
இன்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக் விஜய்சிங்கும், முலாயம்சிங் யாதவால் வெளியேற்றப்பட்டு காங்கிரஸýடன் கைகோத்துக் கொண்டு ஜால்ரா போடும் அமர்சிங்கும் சி.டி. விவகாரம், நொய்டா விவகாரம் என்று நொய்நொய் என்று படுத்துகின்றனர்.
ராம்தேவ் விஷயத்தில் திக் விஜய் சிங் அவதூறு கூறி வாங்கிக் கட்டிக் கொண்டது போதவில்லையா? இவர்களையெல்லாம் அடக்கி வாசிக்கும்படி அண்ணா ஹஸôரே சோனியாவுக்கு எடுத்துக்கூறி, அதன்படி சோனியாவும் இன்று ஊழலை ஒழிப்பதில் தானும் ஆர்வம் உடையவர் என்று ஹஸôரேவுக்குப் பதில் கூறினாலும் திரும்பத் திரும்ப திக் விஜய் சிங்கிற்கு, ""ஜன் லோக்பால் சட்டத்தை எப்படியாவது முடக்க வேண்டும்'' என்ற குறிக்கோள் உள்ளது வருந்தத்தக்கது.
எனினும், அரவிந்த் கெஜ்ரிவாலும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியும், சாந்திபூஷண் மீது சாட்டப்பட்டுள்ள புகார்கள் பொய்யானவை என்று கூறி, மக்கள் சமூகப் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ள அறுவர் குழுவிலிருந்து சாந்திபூஷண் விலகமாட்டார் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
சத்தியத்துக்குச் சோதனைகள் வருவது நியதி. சத்திய சோதனையில் காந்தியைப் போல் அண்ணா ஹஸôரேயும் வெற்றி பெறுவார்.