முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆகாய விவசாயமா? ஆகாயக் கோட்டையா?

பசுமைப் புரட்சியின் தொடர்ச்சி என்றும், நகர்ப்புற விவசாயத்தின் புதிய அவதாரம் என்றும் வானுயர வாழ்த்தி வரவேற்கப்படும் ஆகாய விவசாயத்தில்

நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆகாய விவசாயமா? ஆகாயக் கோட்டையா?

பசுமைப் புரட்சியின் தொடர்ச்சி என்றும், நகர்ப்புற விவசாயத்தின் புதிய அவதாரம் என்றும் வானுயர வாழ்த்தி வரவேற்கப்படும் ஆகாய விவசாயத்தில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

பசுமைப் புரட்சியின் தொடர்ச்சி என்றும், நகர்ப்புற விவசாயத்தின் புதிய அவதாரம் என்றும் வானுயர வாழ்த்தி வரவேற்கப்படும் ஆகாய விவசாயத்தில், மண் வேண்டாம். காற்று ஈரமே போதும். இயற்கை } ரசாயனம் என்ற விவாதமே இல்லை. இதற்குப் பல பெயர்கள் உண்டு. சிலர் இதை செங்குத்து விவசாயம் (VERTICAL FARMING) என்றும், சிலர் வாயு விவசாயம் (ARIEL FARMING) என்றும் வர்ணிக்கின்றனர்.
மூடிய பசுமைக் கூடாரம் அந்தரத்தில் செயல்படுவதால், ஆகாய விவசாயம் என்பது என் கருத்து. அமெரிக்காவில் ஃபுளோரிடாவிலும் கலிஃபோர்னியாவிலும்,
இதே தத்துவம் இங்கிலாந்தில் பாதாள விவசாயமாகவும் நடைபெற்று வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக இதன் வெற்றி சில காய்கறி, பழங்கள், பாதாம் பருப்பு, மலர்களுக்கு மட்டுமே. இந்தியாவுக்குள் இது நுழைவது சுலபமல்ல. மண்ணோடு போட்டி போட்டு மலிவு விலைக்கு இதன் விளைபொருள்களை விற்க முடியாது. எனினும், இஸ்ரேலியத் தொழில்நுட்பமான HYDRO PHONIC எனப்படும் நீரூட்ட விவசாயம் இந்தியாவில் நுழைந்துவிட்டது.
வேருக்கு வேண்டிய மண் வழியே வழங்குவது பாரம்பரிய விவசாயம். நீர் வழியே ஊட்டம் வழங்குவது மண்ணில்லா நீரூட்ட விவசாயம். இதை இஸ்ரேல் முழுமையாகக் கடைப்பிடிக்கிறது. மண் மீது செய்யும் விவசாயத்தில் "ஹைட்ரோ போனிக்' முறையில் நீர்ச் சிக்கனத்துடன் ரசாயன உரங்களை திரவ வடிவில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சில இயற்கை விவசாயிகள் இதன் மாற்றாக, பஞ்ச கவ்யத்தை வடிகட்டி ஸ்பிரிங்க்ளர் மூலம் ஹைட்ரோ போனிக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், இந்த ஆகாய விவசாயத்தில் அதுவும் இல்லை.
இந்த ஆகாய விவசாயத்தில் மண் இல்லை. ரசாயன உரம் } பூச்சி மருந்து இல்லை. ஏன்? சூரிய ஒளியும் இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ணம், புழுக்கம் உண்டு. ஆகாயத்தில் பாபிலோனியத் தொங்கு தோட்டம் புத்துருவம் பெற்று சிலிக்கான் வேலி } ஒளிக் கூடாரங்களின் பக்கபலத்துடன் விவசாயத்தையே கணினியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. என்ன காரணம்?
விவசாயத்தில் பாரம்பரியம் அழிந்து வருகிறது. நன்னீர் நிலமெல்லாம் உவராக மாறிவருகிறது. ஹைட்ரோ } கார்பன் திட்டம் வேண்டாம் என்று கூறும் விவசாயிகள், 1,000 முதல் 1,500 அடிக்கு பூமியில் துளையிட்டு உப்பு நீரைப் பயிருக்குப் பாய்ச்சி நன்னீரை உவராக்கிவிட்டனர்.
மழை நீரைச் சேமித்து மேல்மட்ட ஊற்றுகளை உயிரூட்டம் செய்யும் மற்ற மாநில அணுகுமுறைகளை வரவேற்காமல் போனால், தமிழ்நாடு பாலைவனமாகும் ஆபத்து உள்ளது. இனி உங்கள் விதி, ஆகாய விவசாயமே.
அமெரிக்காவில் ஷேல் கேஸ் } ஹைட்ரோ}கார்பன் திட்டம் வெற்றி பெற்று இனி அமெரிக்கா வளைகுடா நாடுகளை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லாமல், தங்கள் தேவைக்கு மேல் உற்பத்தியாகும் ஷேல் கேஸ் } இயற்கை எரிவாயுவை
இந்தியா } சீனா மற்றும் வேறு ஆசிய } ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஷேல் கேஸ் } ஹைட்ரோ}கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் மலிந்துள்ள பென்சில்வேனியாவில் ஏற்படாத விவசாய நெருக்கடி, கலிஃபோர்னியாவிலும், புளோரிடாவிலும் ஏற்பட்டு அப்பகுதி விவசாயிகளே இன்று, சிலிக்கன்வேலி } ஆகாய விவசாயத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த ஆகாய விவசாயத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் என்ற துறையில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
ஒரு புளோரிடா விவசாயிக்கு 1992}இல் வீசிய ஆண்ட்ரூ புயலால், அவருடைய 30 ஏக்கர் ஸ்ட்ராபெர்ரி விவசாயம் அழிந்தது. பெரிய நஷ்டமும் மனஉளைச்சலும் ஏற்பட்டது.
எனினும், அவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. அந்த நஷ்டஈட்டை முதலாகப் போட்டு ஒரு மாபெரும் பசுமைக் கூடாரத்தை, மீண்டும் புயலால் பாதிப்பு ஏற்படாத வகையில் கனமாகவும் உயரமாகவும் வடிவமைத்தார். அந்த 30 ஏக்கரில் ஓர் ஏக்கரில் மட்டும் செங்குத்துப் பசுமைக் கூடாரம் போட்டு பழையபடி ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்தார்.
ஹைட்ரோஃபோன் முறையில் நீர்ச்சிக்கனப் பாசனம் வழங்கியபோது, 30 ஏக்கரில் எவ்வளவு விளைந்ததோ அதே அளவு ஓர் ஏக்கர் நிலத்தில் விளைந்தது, மீதி 29 ஏக்கரில் சேற்று விவசாயம் பாரம்பரிய வழியில் செய்கிறார். இவருடைய வெற்றியை அன்று சூழல்வாதிகள் பரபரப்புடன் போற்றியதால் பிற மாநிலங்களுக்கும் பசுமைக் கூடார விவசாயம் பரவியது.
இன்றைய இந்தியாவிலும் பசுமைக் கூடார விவசாயம் வெற்றி பெற்றாலும், காய்கறி, பழங்கள், மலர்கள் மிக அதிகச் செலவில் விளைவிக்க முடியாது. எனினும்கூட, கணிசமான அளவுக்கு ரசாயன உரங்களையும் பூச்சிமருந்துப் பயன்பாட்டையும் குறைத்து நல்ல ஆரோக்கியமான உழவுமுறையை நோக்கிய ஒரு முன்னேற்றத்திற்கு ஆகாய விவசாயம் வழிவகுக்கும்.
புளோரிடா வெற்றியைத் தொடர்ந்து கலிஃபோர்னிய வெற்றியையும் இங்கு கவனிக்க வேண்டும். உலகிலேயே மிகவும் கடுமையான வறட்சியை கலிஃபோர்னியா சந்தித்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இன்றைய தமிழ்நாட்டைவிட 10 மடங்கு வறட்சியை சந்தித்துள்ளது.
1,200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலை தொடர்ந்ததாக வானிலை } புவியியல் சார்ந்த விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்ட மதிப்பீடு 43 பில்லியன் அமெரிக்க டாலர். இப்படிப்பட்ட நஷ்டத்தைக் கண்டு துவண்டுவிடாமல் எழுச்சியுறச் செய்தது ஆகாய விவசாயம் என்ற அதிசய அமைப்புகள்.
இந்த அமைப்புகளை ஆங்கிலத்தில் Sci - fi Mould - அதாவது "விஞ்ஞான அதிசயமாக விண்ணை மூட்டும் பசுமை வளாகங்கள்' என்று வர்ணிக்கின்றனர். இந்த அதிசயங்கள் பார்க்கவே பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த அதிசயங்களைப் பார்க்க நம்மால் கலிஃபோர்னியாவுக்குப் போக முடியாது. கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால், கூகுள் சென்று, VERTICAL FARM என்று Search-இல் டைப் செய்தால் இப்படிப்பட்ட அழகு விவசாய வளாகங்கள்
விண்ணைமூட்டும் காட்சிகளைக் காணலாம்.
கலிஃபோர்னியாவின் மையப் பகுதிப் பள்ளத்தாக்கு (CENTRAL VALLEY) பசுமைப் புரட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் சாட்சியாகவும், நகர்ப்புற விவசாயத்தின் உச்சகட்டமாகவும் விளங்கி வருகிறது.
சில விவசாயக் கவிஞர்கள் கணினியைக் கிண்டல் செய்து கவிதைகள் எழுதினர். "கணினி சோறு போடுமா? கணினி களை வெட்டுமா?' எல்லாம் பொய்யாகிவிட்டது. புதிய ஆகாய விவசாயம் கணினியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதாம்.
கலிஃபோர்னியாவின் மையப் பள்ளத்தாக்கில் முக்கிய வணிக விவசாயமான பாதாம் பருப்புப் பயிர்களைச் சுற்றி வயர்கள், ஈரப்பசையை அளவிடும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு, மண்ணின் ஈரம் துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டு, மேகத்திற்குத் தகவல் அனுப்பி, சொட்டு நீர்ப்பாசனத் தேவையைப் பெறுகிறார்களாம்.
பாதாம் மரங்களின் நீர்த் தேவை உரத் தேவைகளை மேன்மை மிகு ஹைட்ரோஃபோன் நிறைவேற்றுகிறதாம். விவசாயத்திலும் கணினி புகுந்துவிட்டது.
இந்தியாவிலும் பஞ்சாபில் உள்ள விஞ்ஞான விவசாயிகள் } நிறைய பணபலம் உள்ளவர்கள்; லேசர் கருவிகள் இணைக்கப்பட்ட டிராக்டர்கள் மூலம் துல்லிய உழவு, விதைப்பு, பாசனம் நிகழ்கிறது. பல இடங்களில் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு ஏற்ப ஹைட்ரோஃபோன் அறிமுகமாகி வருகிறது.
இந்திய விவசாயத்தில் இஸ்ரேலியலிசம், கலிஃபோர்னியலிசம் நுழைய முயற்சிப்பதை வரவேற்பதா? மறுப்பதா? எந்த அளவில் இயலுமோ அந்த அளவில்தான் இங்கு நுழைய முடியும். புதிய ஆகாய விவசாயம் மூலம் பயிர் செய்த உணவின் செலவு என்று கவனித்தால் அது இந்திய விவசாயிகளின் சக்திக்கு மீறிய விஷயமே.
எனினும், கலிஃபோர்னியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளில் தோன்றியுள்ள மாற்றத்திற்கு அடிப்படை, காலநிலை மாற்றமே. சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி, தாங்க இயலா வெப்பநிலை ஆகியவற்றின் மாற்று என்ற கண்ணோட்டத்தில் ஆகாய விவசாயத்தை வரவேற்கலாம். சுமார் 70 சதவீத அளவில் நீர்ச்செலவு மிச்சமாகிறது. புயல், வெள்ளம் ஆகியவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
நாளுக்கு நாள் விளைநிலங்கள் எல்லாம் மனைப் பிரிவுகளாக மாறிவரும் சூழ்
நிலையை சமாளிக்க மண்ணில்லா ஆகாய விவசாயம் வரவேற்புக்குரியதுதான் என்றாலும், இந்தியாவில் இந்த ஆகாய அற்புதங்கள் வேரூன்றுவது அவ்வளவு சுலபமல்ல.
பஞ்சாபில் தொடங்கிவிட்டால் அடுத்தது தமிழ்நாடுதான். வரலாற்றை கவனித்தால் பசுமைப் புரட்சி பஞ்சாபில் காலூன்றிய பின், தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாயிருந்தது. கணினிப் புலிகளும், கணிதப் புலிகளும் தமிழ்நாட்டு விவசாயத்தில் இறங்கியுள்ளனர். மாற்றம் வருமா? ஏற்றம் வருமா?
ஆகாயத்தையே அண்ணார்ந்து பார்த்தபடி நிற்போம். இப்போதைக்கு மழை வந்தால் போதும்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

முழு கட்டுரையைப் படிக்க →