முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு? மும்பையில் அதிரடி சோதனை; 4 பேரிடம் தீவிர விசாரணை!

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியதைப் பற்றி...

Updated On : 3 மார்ச் 2026, 12:21 pm IST
பாகிஸ்தான் பயங்கரவாதிகள். - (கோப்பிலிருந்து...)
பகிர்:

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தியதாக அதிகாரி ஒருவர் செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளார்.

உளவுத்துறையினர் கொடுத்தத் தகவலின் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் புறநகரின் கிழக்குப் பகுதியான குர்லாவிலும், கோவண்டியின் மூன்று இடங்களிலும், தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

Advertisement

Advertisement

சந்தேகத்திற்குரிய நான்கு பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு சட்டத்தின் கீழுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களிடமிருந்து உரிய ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.