நடுப்பக்கக் கட்டுரைகள்

தடுப்பு கட்டையை உடைத்து தடம் புரண்ட ரயில் என்ஜின்

DIN

சிதம்பரம் அருகே ரயில் என்ஜினை மாற்றுப் பாதையில் மாற்ற முயன்றபோது, தடுப்புக் கட்டை மீது மோதி தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கரிகுப்பம் கிராமத்தில் தனியார் அனல் மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்துக்கு தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படும்.
இதன்படி, தூத்துக்குடியிலிருந்து புதுசத்திரம் ரயில் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் வந்தது. அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள தனியார் மின் அனல் மின் நிலையத்துக்குச் செல்வதற்காக சரக்கு ரயிலின் என்ஜினை வேறு தடத்தில் மாற்றும் பணி நடைபெற்றது.
இதற்காக வியாழக்கிழமை அதிகாலை மாற்றுப் பாதைக்கு என்ஜினை மாற்ற பின்புறமாகச் சென்றபோது, ஓட்டுநரின் கவனக் குறைவால் தண்டவாளம் முடியும் இடத்தில் உள்ள தடுப்புக் கட்டையை உடைத்து கொண்டு ரயில் என்ஜின் தடம் புரண்டு கீழே இறங்கியது.
தனி பாதையில் ரயில் என்ஜின் கீழே இறங்கியதால், மற்ற ரயில்களின் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை. பின்னர், விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு ரயில் கொண்டு வரப்பட்டு, ஊழியர்கள் ரயில் என்ஜினை மீட்டு தண்டவாளத்தில் நிறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT