இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்பு அளப்பரியது.இந்தியா வந்த அவர், பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கி மகாத்மா காந்தியைச் சந்திக்கச் சென்றார். "நீ வங்காளத்தைச் சேர்ந்தவன்தானே, உன் மாநிலத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் இருக்கிறார். அவரைச் சந்தித்து அவர்வழியில் போராட்டத்தில் இறங்கு' என்று வழிகாட்டி அனுப்பி வைத்தார் காந்திஜி.
சித்தரஞ்சன் தாஸ் வழிகாட்ட வங்காளத்தில் தேசியக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் நேதாஜி. மாணவர்கள் மத்தியில் நேதாஜி பேசப்பேச இளைய சமுதாயம் வீறுகொண்டு எழுந்தது.
வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது நாடு முழுவதிலும் அவரது வருகைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. மற்ற பிற மாநிலங்களை விடவும் வங்காளத்தில் மிகப் பெரிய கிளர்ச்சி எழுந்தது. இதற்குக் காரணமானவர் யார் என்பதையும் அறிந்து, சுபாஷ் சந்திர போûஸக் கைது செய்து ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அளித்தது.
சிறைத் தண்டனையை முடித்துவிட்டு வந்த அவர், வெள்ள நிவாரணக் குழுவில் செயலாளராகப் பணியாற்றி மக்கள் சேவையாற்றினார். "சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைவோம்' என்ற முழக்கத்தை தேசபந்து முன்வைத்தார். "சுயராஜ் கட்சி' என்ற அமைப்பு காங்கிரஸின் உட்கட்சியாக உருவானது. "ஃபார்வேர்ட்"1924 கல்கத்தா நகர கார்ப்பரேஷனுக்கு தேசபந்து தலைவர். முதன்மை நிர்வாக அதிகாரி நேதாஜி போஸ். மாநகர நிர்வாகம் சூடு பிடித்தது. தெருவெல்லாம் தேசியம் மலர்ந்தது. "ஆள் தூக்கிச் சட்டம்' எனும் அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி எந்தக் காரணமும் சொல்லாமல், விசாரணையும் இல்லாமல் சுபாஷ் சந்திர போûஸ பிரிட்டிஷ் அரசு கைது செய்து கல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. அவரை விடுவிக்கக் கோரி, மகாத்மா காந்தி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, மோதிலால் நேரு போன்றோர் கல்கத்தாவுக்குச்சென்று போராடினர்.
பயந்துபோன பிரிட்டிஷ் அரசு சுபாஷை பர்மா மாண்டலே சிறைக்கு மாற்றியது. மாண்டலே சிறைவாசம் போஸின் உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. அந்த நேரத்தில் சித்தரஞ்சன் தாஸும் மரணம் அடைய கலங்கிப் போனார் போஸ்.
"மன்னிப்பு கேள்! விடுதலை செய்கிறோம்' என்றது பிரிட்டிஷ் அரசு. ஆனால், மறுத்துவிட்டார் போஸ். அவரது உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில், சிறைக்குள் அவர் உயிரிழந்து விட்டால் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என எண்ணிய பிரிட்டிஷ் அரசு அவரை விடுதலை செய்தது.
1927-இல் போஸ் சென்னைக்கு வந்தார். சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "இந்தியாவின் லட்சியம் பூரண சுதந்திரம்' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1928-இல் மகாராஷ்டிரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 1927-இல் சென்னையில் இயற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி அதையே வலியுறுத்தினார் போஸ்.
"குடியேற்ற அந்தஸ்து இப்போதைக்கு போதுமே' என்று மோதிலாலும், அவரது ஆதரவாளர்களும் கூறினர். இதில் போஸ் உடன்படவில்லை.
1929-இல் லாகூர் காங்கிரஸ் மாநாடு. இந்த மாநாட்டிலிருந்துதான் மகாத்மா காந்திக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்கும் முரண் தொடங்கியது. மகாத்மா காந்தி கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்றுப்பேசிய சுபாஷ் சந்திரபோஸ், அதில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். பரிபூரண சுதந்திரம் என்பதற்கான போராட்டம் ஒருபுறம் நடைபெறட்டும்; மறுபுறம் நாம் "சுதந்திர இந்திய போட்டி அரசாங்கம்' என்று ஒன்றை பிரகடனம் செய்து நடத்த வேண்டும் என்பதுதான் அந்தத் திருத்தம். இதை மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக முதலாம் உலகப் போர் அவர்கள் இருவரையும் எதிரெதிர் முனைகளில் நிறுத்தியது. அயர்லாந்து மக்களைப்போல், பிரிட்டனை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார் நேதாஜி. ஆனால், மகாத்மா காந்தி பிரிட்டனை ஆதரித்து படைக்கு ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டார். மகாத்மா காந்தி, பண்டித நேரு உள்பட யாரும் ஆதரிக்காத நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார்.
காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாரானார் சுபாஷ் சந்திரபோஸ். மக்களைத் திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து பரிபூரண விடுதலையைச் சாதிப்பதுதான் அவரது திட்டம். இதற்கு மகாத்மா, பண்டித நேரு உள்பட பல தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை.
பின்னர், காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்தார் நேதாஜி. "ஃபார்வர்ட் பிளாக்' என்ற அமைப்பை உருவாக்கி நாடு முழுவதிலும் பொறுப்பாளர்களை நியமித்தார்.
ஆயுதம் திரட்டி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி பரிபூரண சுதந்திரம் அடைய, இந்தியாவை விட்டு வெளியேறி படை திரட்டி புதிய அரசாங்கம் அமைத்து "சலோ டெல்லி' என்று முழங்கினார். இதனால், பிரிட்டிஷ் அரசு அதிர்ச்சி அடைந்தது.
நேதாஜி போஸ் இந்திய தேசிய ராணுவம் அமைத்தார். "என் தாய் திருநாட்டை அடிமை செய்ய எவருக்கும் உரிமை இல்லை; என் உயிரைக் கொடுத்ததும் என் தாய் நாட்டை விடுதலை செய்வேன்!' என்ற முழங்கி நடைபயின்ற தலைவன் இந்திய மண்ணுக்குள் வரவில்லை; லட்சியப் போர் பயணம் பாதியில் நின்றுபோனது.
களம் கண்ட நேதாஜி களத்திலேயே மறைந்து போனார். இந்திய சுதந்திர சேனையும் நேதாஜியும் தில்லிக்கு வந்திருந்தால் மவுண்ட் பேட்டனின் அரசியல் சூது தோற்றுப் போயிருக்கும். நாடு பிளவுபட்டிருக்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.