FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மதுரை தமுக்கம் - நெல்பேட்டை புதிய பாலம்: பிப். 21-ல் முதல்வர் திறக்கிறார்!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்துவைக்கும் முதல்வர்.

Updated On : 16 பிப்ரவரி 2026, 8:00 pm IST
முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

மதுரை தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்தை பிப். 21-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மேலும், இந்தப் பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

மதுரை தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு  “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”  எனப் பெயர் சூட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

Advertisement

Advertisement

”நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது திராவிட மாடல்-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”!

தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin will inaugurate the bridge built from Madurai Tamukkam Thidal to Nelpettai Anna Statue on Feb. 21.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments