மேக்கேதாட்டு அணை; தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர்: உதயநிதி குற்றச்சாட்டு
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முதல்வர் அடகு வைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளது பற்றி...
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முதல்வர் அடகு வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மேக்கேதாட்டு அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகத்துக்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
Advertisement
Advertisement
தில்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர்.
இந்தப் பிரச்னையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேக்கேதாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். கர்நாடகத்தில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த சோஃபா மாடல் முதல்வர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Leader of the Opposition Udhayanidhi Stalin alleged on Tuesday (July 28) that the Chief Minister has compromised Tamil Nadu's rights regarding the Mekedatu dam issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.