சிறப்புக் கட்டுரைகள்

பூப்பூவாய் சிரிக்கும் அம்மாக்கள் குழந்தைகள்!

பூப்பூவாய் சிரிக்கும் அம்மாக்கள் குழந்தைகள்!

உமா ஷக்தி.


கர்ப்பிணிப் பெண்கள், அன்று பிறந்த பச்சிளம் குழந்தை, சின்னஞ்சிறு மழலைச் செல்வகள் இவர்களைத்தான் அம்ருதாவின் கேமரா ஆசை ஆசையாய் படம்பிடிக்கும். பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் கர்ப்பமாக இருக்கும்போது தான். எப்படித்தான் அதை கடந்து வந்தேனோ என்று பல பெண்கள் ஆச்சரியமாகவே தங்கள் அனுபவங்களைச் சொல்வார்கள். அப்போது அவர்களின் உடல் மனம் எல்லாம் மாறி முற்றிலும் ஒரு புது உயிருக்காகக் காத்திருப்பார்கள். தாய்மை என்பது உன்னதம். தாய்மை என்பது வரம். அதைப் படம் பிடிக்க முடிவு செய்து தான் களத்தில் இறங்கினேன். என்னுடைய 'மம்மி ஷாட்ஸ் பை அம்ருதா’ கம்பெனியும் பிறந்தது’ என்று ஆர்வமுடன் சொன்னார் அம்ருதா சமன்த். நிறைமாதத்தில் பெண்களின் மேடிட்ட வயிறுடன் குழந்தையை எதிர்ப்பார்த்து இருக்கும் ஆவலான முகங்களை ஃபோட்டோ எடுத்துத் தருவேன். அந்தத் தருணங்கள் அவரவருக்கு பொக்கிஷம்.


ஆரம்பத்தில் திருமண ஃபோட்டோகிராபராகத்தான் தன் பணியைத் தொடங்கியுள்ளார் அம்ருதா. அவருடைய தனித்தன்மையான புகைப்படங்கள் மணமகள்களை ஈர்க்கவே கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பிறந்தவுடன் என எல்லாவற்றுக்கும் அவரையே தொடர்ந்து அழைக்க ஆரம்பித்தார்கள். இதையே ஏன் ஒரு தனித்துறையாக எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்ற எண்ணம் வரவே செயல் வடிவம் கொடுத்தார்.



குழந்தைகளை மகிழ்விக்க விதவிதமான பொம்மைகள், மெத்து மெத்தென்ற தரைவிரிப்புகள் மற்றும் ஃபோட்டோ எடுக்கத் தேவையான அனைத்து விஷயங்களையும் தன்னுடைய காரில் எப்போதும் வைத்திருக்கிறார். என்னிடம் வேலையை ஒப்படைத்துவிட்டால் அதன்பிறகு முதலில் குழந்தையை நேரில் ஒரு முறைப்பார்த்துவிடுவேன். அந்தக் குழந்தையின் யூனிக்கான விஷயங்களைப் பற்றி யோசிப்பேன். என்னுடைய தோழி சிந்தியா ஐயர் ஒரு டிசைனர். அவளுடைய ஐடியாக்களையும் கேட்டுக்கொள்வேன். பெரும்பாலும் வீட்டில் அல்லது பார்க்கில் என குழந்தைக்குப் நன்றாகப் பரிச்சயமான இடங்களில் தான் ஃபோட்டோ ஷூட் வைத்துக்கொள்வேன். இயற்கையாக, இயல்பாக குழந்தைகள் விளையாடும் போது அந்த நொடியை அப்படியே படம்பிடித்துவிடுவேன். இது சொல்வதைப் போல அத்தனை சுலபமான வேலை கிடையாது. நிறைய பொறுமை தேவை. குழந்தைகள் நொடிக்கு நொடி முகபாவங்களை மாற்றுவார்கள்.காரணம் தெரியாது சிரிப்பார்கள், அழுவார்கள். அவர்களுடன் இணைந்து அவர்கள் மூடுக்கு ஏற்ப விளையாடி ஃபோட்டோ எடுக்க வேண்டும். எனக்கு குழந்தைகளும் ரொம்ப பிடிக்கும், என்னுடைய கலை ஃபோட்டோகிராபியும் மிகவும் பிடிக்கும் என்பதால் இரண்டும் இணையும் இந்த வேலையை விருப்பத்துடன் செய்கின்றேன்.


பிறந்த குழந்தைகளைக்கூட நான் புகைப்படம் எடுத்துள்ளேன். நம் நாட்டில் இன்னும் சில மூட நம்பிக்கைகள் உள்ளது. குழந்தை பிறந்து ஒரு வயதாகும் வரை ஃபோட்டோ எடுக்கக்கூடாது, திருஷ்டி என்று இன்னும் நிறைய பேர் நம்புகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த ஃபோட்டோகிராபி சென்னையில் இப்போது பரவ ஆரம்பித்துள்ளதால் பல இளம் தாய்மார்கள் என்னை அணுகி தங்கள் குழந்தையின் முதல் சிரிப்பை, முதல் அழுகையை, முதன் முதலில் தானாக நடக்க முயற்சிக்கும் தருணத்தை எல்லாம் பதிவு செய்ய அழைக்கிறார்கள், சந்தோஷமாகச் செய்து தருகிறேன்... இதோ இன்னும் சில மாதங்களுக்கு ஃபுல் புக்கிக்’. என்றார் அம்ருதா.

குழந்தைகள் ஃபோட்டோவுக்கு சந்தோஷமாக போஸ் தர சில டிப்ஸ் -

* நன்றாக கையைக் காலை அசைத்து விளையாடுங்கள்.

* சத்தமாக சந்தத்துடன் ரைம்ஸ் பாடுங்கள்.

* அவர்களுக்கு சிரிப்பு மூட்டும் விஷயத்தைச் செய்யுங்கள்

* பெரிய கண்களை உடைய பொம்மைகள், கலர் கலர் லைட்டுகள் எரியும் ரயில்களை அவர்கள் முன் வையுங்கள்.

* பபிள்ஸ் ஊதுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT