சிறப்புக் கட்டுரைகள்

இளமை வேண்டுமா?

’என்ன ஆட்டம் ஆடினார், இப்ப பாரு எப்படி அடங்கிப் போய்க் கிடக்கறார் என்று முதியவர்களைப் பார்த்து சொல்வதுண்டு. காரணம் வயதாகும் போது பழைய உணர்ச்சிகள் கோப தாபங்கள் எல்லாம் குறைந்து உடல் சக்தி குறைந்து வயது ஏறிவிடும்.

உமா ஷக்தி.

’என்ன ஆட்டம் ஆடினார், இப்ப பாரு எப்படி அடங்கிப் போய்க் கிடக்கறார் என்று வயது போனவர்களைப் பார்த்து சிலர் சொல்வதுண்டு. காரணம் வயதாகும் போது பழைய உணர்ச்சிகள் கோப தாபங்கள் எல்லாம் குறைந்து உடல் சக்தி குறைந்து விடும். அதனால் மனமும் சோர்வடைந்து இனி என்ன இருக்கு வயசாயிடுச்சு என்ற அலுப்பு வந்துவிடும். ஆனால் இளமையுடன் இருப்பது எளிது. ஆரோக்கியமாக இருந்தாலே இளமை எப்போதும் உடனிருக்கும்.

நாற்பது வயதில் ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றத்தின் முதல் கட்டம் தசைகள் மெல்ல தளரத் தொடங்கும்.  உணவுக் கட்டுப்பாடும் சரியாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையும் மட்டுமே உடலை தெம்புடன் வைத்திருக்க உதவும்.

பெண்களைப் பொருத்தவரையில் நாற்பது வயதில் தான் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் புரதச் சத்து உடலில் குறைய ஆரம்பிக்கும்.  பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலுக்குத் தருவதில்லை. ஆரோக்கியம் தான் அழகு என்பதை மறந்துவிடுவது சோகம். இளமையுடன் எப்போதும் இருக்க சில வழிமுறைகள் இதோ:

  • மனதை ஒருநிலையில் குவித்து செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.உடலும் மனமும் லேசாக யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. தினமும் காலை ஆசனங்கள் செய்தபின் சவாசனம் செய்வதால் மனம் புத்துணர்ச்சி அடையும். கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் பத்து நிமிடமாவது படுக்க வேண்டும்.
  • உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். அழுத்தமான நிறங்களை உடைய காய்கறிகளையும் பழங்களையும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காலை உணவுடன்  ஒரு பச்சை நிறக் காய் சாப்பிடலாம். மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் பின்னர்  பச்சை நிறப் பழத்தைக் சாப்பிடலாம். இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மஞ்சள் அல்லது ஆரஞ்சுப்வண்ணக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடலாம். தினமும் இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி தேன் பருகுவது நல்லது.
  • அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அனேக சத்துக்கள் அவ்வுணவு வகைகளில் கிடைத்துவிடும். சைவப் பிரியர்கள் கீரை, எள் ,முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெரும்பாலோருக்கு உடல் பருமன் பிரச்னை தான் சிக்கல்.. உடல் எடை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அன்றாட உணவில் எண்ணெயின், அளவைக் குறைப்பது நல்லது. சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்கள் உடலுக்கு கெடுதல் விளைவிப்பவை.
  • காய்கறிகள் பழங்கள் சேர்த்தால் உடலில் ஆன்டி ஆக்சிடென்ட் சேரும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் அதுவே இளமையாக வைத்திருக்கும் முக்கிய காரணி. அவரைக்காய், முட்டை கோஸ், பீன்ஸ்  போன்றவையும் நீர்க்காய்களான சௌ சௌ, புடலங்காய், பூசணிக்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டும். சைவமோ அசைவமோ சமச்சீர் சத்துக்கள் கிடைக்கும்படி  உணவு சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
  • அதைவிட முக்கியம் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போதை மருந்து உட்கொள்வது போன்ற பழக்கங்கள் இருந்தால் அது இளமையை மட்டுமல்ல உயிரையும் வாங்கிவிடும். எனவே இளமையுடன் இருக்க விரும்பினால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • நல்ல இசையைக் கேட்பது. பயணம் செய்வது, புத்தகங்கள் படிப்பது, நண்பர்களை அடிக்கடி சந்திப்பது, பிறருக்கு முடிந்த வகையில் ஏதேனும் உதவி செய்வது, சமூக அக்கறையுடன் வாழ்வது, தொட்டிச் செடி வளர்ப்பது எதிர்மறை எண்ணங்களை அகற்றுவது, சத்சங்கம் உருவாக்கி அதில் கலந்துகொள்வது, எண்ணங்களைத் தூய்மைபடுத்தி தானும் சந்தோஷமாக வாழ்ந்து சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தில் அக்கறையுடன் இருப்பது ஆகியவற்றைச் செய்தால் எப்போதும் இனிக்கும் இளமையுடன் ஜொலிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT