சிறப்புக் கட்டுரைகள்

வடிவேலு காமெடி போல ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறிய பிரபலங்கள்

தினமணி


வடிவேலு நடித்த ஒரு படத்தில், ஒரு கட்சியின் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே, வேறு கட்சிக்குத் தாவுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு இல்லாவிட்டாலும், ஒரு கட்சியில் இருந்து, தேர்தல் நேரத்தில் மற்றொருக் கட்சிக்கு மாறிய முக்கிய அரசியல் பிரபலங்களின் நீண்ட பட்டியல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படி அந்த பட்டியலில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று பார்த்தால் ஒன்றல்ல.. இரண்டல்ல.. கடைசியாக இன்று பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா வரை 41 பேர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தாங்கள் பொறுப்பு வகித்த கட்சியை விட்டுவிட்டு வேறு கட்சிக்கு மாறியுள்ளனர்.

சரி அவ்வளவு பேரையும் உங்களிடம் சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். நமக்கு அதிகம் தெரிந்தவர்களைப் பற்றி பார்க்கலாம்.

இன்று சுடச்சுட கட்சி மாறியவர் சத்ருகன் சின்ஹா. பாஜகவில் அதிருப்தி எம்பியாக இருந்த சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் பிகார் மாநிலம் பாட்னா சாஹிப்பில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

சரி இந்த பட்டியலில் முதலில் தமிழக அரசியல்வாதிகளைப் பார்க்கலாம். அதில், வி.பி. கலைராஜன்தான் முதல் நபர். அமமுக கட்சியைச் சேர்ந்த கலைராஜன், திமுகவில் இணைந்துள்ளார். இவரைத் தொடர்ந்து ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் ரவிச்சந்திரன் ராமவன்னி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதைத் தவிர வேறு எந்த பெரிய கட்சித் தாவல்களும் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெறவில்லை.

அதற்கடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் நடிகை ஜெயபிரதா சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ஜெயப்பிரதா 1994-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.  பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகினார். பின்னர் சமாஜ்வாதிக் கட்சியில் சேர்ந்த அவர், உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அக்கட்சி சார்பாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2010 -ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்த அவர் தற்போது பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு மீண்டும் ராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து சமாஜ்வாதிக் கட்சியின் சார்பாக முக்கியத் தலைவரான ஆஸம் கான் போட்டியிடுகிறார்.

தெலங்கானாவில் ஏற்கெனவே 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) கட்சிக்கு மாறிய நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ, டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். அவர் வேறு யாருமல்ல, கொல்லாபூர் காங்கிரஸ் எம்எல்ஏ பீரம் ஹர்ஷவர்தன் ரெட்டி தான் டிஆர்எஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

சரி இப்படியே பட்டியலிட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு பிடிக்குமா? நிச்சயம் பிடிக்காது. 

அப்படியிருக்கும் போது அதை நாங்கள் எப்படி செய்வோம்.. வாருங்கள் இதில் இன்னொரு புள்ளி விவரத்தை உங்களுக்கு சொல்கிறோம். அதாவது இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 7 அரசியல் பிரமுகர்கள்தான் கட்சி மாறிச் சென்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் தெலங்கானாவும், உத்தரப்பிரதேசமும் 5 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளன.

எது எப்படியிருந்தாலும் கட்சி மாறுவது என்பதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா..!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT