சிறப்புக் கட்டுரைகள்

ராஜீவ்காந்தி ஃபைல்கள் காணாமல் போனது எங்கே?

சி.பி.சரவணன்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. வல்லரசுகளுக்கு  வளைந்துகொடுக்காமல், இந்தியா,  தற்சார்புடன்  வளரவேண்டும் என கனவு கண்ட பிரதமர், நேருவின்  அணிசேராக்கொள்கைக்கு  வலுசேர்க்கும் நோக்கத்தோடு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர்.

இவை எல்லாம் தாண்டி, புதிய இந்தியாவை வடிவமைக்க முனைந்த இளம் பிரதமர், ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். காலங்கள்  உருண்டோடினாலும், அந்த படுகொலை குறித்த, பல்வேறு  கேள்விகள்  இன்றளவும் விடைவேண்டி நிற்கின்றன.  

ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் இருந்த குறைபாடுகள் குறித்து விசாரிப்பதற்காக வர்மா கமிஷனும், சதித்திட்டங்கள் குறித்து விசாரிப்பதற்காக, ஜெயின் கமிஷனும் அமைக்கப்பட்டன. இந்த இரு கமிஷன்களும் தங்கள் அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன. அது ஃபைல்கள் என்ன ஆனது…..

ஜெயின் கமிஷனின் File 1/12014/5/91-IAS/DIII எங்கே? 
முன்னதாக 1991 ஆம் ஆண்டே ஆகஸ்ட் மாதம் நீதிபதி எம் சி ஜெயின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இது ராஜிவ் கொலைக்கான சதிதிட்டம் போன்றவற்றை விசாரிக்க தொடங்கியது. சிறப்பு புலனாய்வு படை போன்றே அனைத்து தரப்பிலும் விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிஷன் 1997 ஆம் ஆண்டு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இப்போது வரை அதன் பரிந்துரைகளில் எது குறித்தும் முறையான உரிய கால அளவிலான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

வர்மா கமிஷன் File No. 8-1-WR/JSS/90/Vol.III எங்கே?
ராஜீவ் காந்தி படுகொலைக்கு எவ்வளவோ காரணங்கள் கூறப்பட்டாலும் அவருக்கு தரப்பட்ட பாதுகாப்பு குறித்து விமர்சனங்கள் அப்போது எழுந்தன. எனவே அது குறித்தும் இந்தக் கொலைக்கான சதித் திட்டம் குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்டது தான் வர்மா கமிஷன். இந்த கமிஷன் அமைக்கப்படும் போது சிறப்பு புலனாய்வுக் குழுவும் தன் விசாரணையை தொடந்திருந்ததால் சதித் திட்டம் குறித்து விசாரிக்காமல் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி மட்டும் விசாரிப்பதாக வர்மா கமிஷன் கூறியது. அந்த வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உளவுத்துறை செயல்பாடுகள் குறித்து விசாரித்த வர்மா கமிஷன் தன் அறிக்கையை 1992 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு தந்தது.

ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்
2008-ம் ஆண்டு ராஜீவ் படுகொலை வழக்கைக் கையாண்ட தடய அறிவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர், ‘ஃபர்ஸ்ட் ஹியூமன் பாம்’ என்ற புத்தகத்தை எழுதினார். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன.

‘கேமரா எப்படி பாதிப்படையாமல் கிடைத்தது?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும் சந்திரசேகர், ‘ பூகம்பம் நடக்கும்போது அதிர்ஷ்டவசமாக சிலர் இடிபாடுகளுக்கு நடுவிலும் பாதுகாப்பாக வெளிவந்திருக்கிறார்கள். அதைப் போலத்தான் கேமராவும் கிடைத்தது’ என்கிறார். ஆனால், ‘ கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்களில் இதுபோன்ற உவமைகள் எடுபடாது, சம்பவ இடத்தின் நிலவரத்தைப் பொறுத்து அறிவியல்ரீதியாகப் பேச வேண்டும்’ என அமெரிக்காவின் டாபெர்ட் வழக்கின் புலனாய்வு வழிமுறைகள் சொல்கிறது.

டாபெர்ட் வழக்கின் புலனாய்வு முறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால், இந்த வழக்கின் போக்கே திசைமாறியிருக்கும். அப்படி எதையும் புலனாய்வுத் துறை செய்யவில்லை

‘பைபாஸ்’
‘பைபாஸ்’ (புறவழிச்சாலை) என்ற தலைப்பில், ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகிய இருவரும்தான், ஹரிபாபுவை நோக்கிக் காய்களை நகர்த்தியவர்கள்.

ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் விசாரணை செய்யப்படவில்லை. அத்துடன் ராஜீவ் கொலை குறித்து பல புத்தகங்கள் வந்துவிட்டன. தற்போது டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஃபெராஸ் அஹ்மத் "Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ராஜிவ் கொலை என்பதே ஒரு அரசியல் ஆதாயத்துக்கு நடந்த கொலைதான். சிபிஐ சொல்வது போல தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இதில் தொடர்பிருக்குமா என்பது சந்தேகமே என்கிறது இப்புத்தகம்.

கமிஷன் ஆவணங்கள் காணவில்லை?
1997 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, அவுட்லுக் இதழில் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகின்றது. 1989க்கும் 1991க்கும் இடைப்பட்ட காலத்தில், ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறித்து, அதிகாரிகள் அளித்த குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம், பிரதமர் அலுவலகத்திலிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதை அந்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.

காணாமல்போன அந்த ஆவணத்திற்கு பதிலாக, அதேபோன்று, புதிதாக உருவாக்கப்பட்ட ஆவணத்தை ஜெயின் கமிஷனிடம், அரசு தாக்கல் செய்கின்றது. அந்த ஆவணம் திருத்தம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்த ஜெயின் கமிஷன், அதுகுறித்து கேள்வி எழுப்பிய பிறகே, அந்த ஆவணம் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட உண்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.

பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த பிறகும், உண்மையான ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், ஆகவேதான் மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஆவணத்தை தாக்கல் செய்ததாகவும், ஜெயின் கமிஷனிடம் மத்திய அரசு தெரிவிக்கின்றது.

ராஜீவுக்கு வழங்கப்பட்டிருந்த, எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? யார் அதை முன்மொழிந்தது? என்ற மிக முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்லும் அந்த ஆவணம், உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள, பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வாறு காணாமல் போனது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.

ஜெயின் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் ராஜீவ் படுகொலைக்கு பின்னால் உள்ள சதியை விசாரிப்பதற்காக MDMA (Multi-Disciplinary Monitoring Agency)என்று அழைக்கப்படும் விசாரணை அமைப்பு ஆகஸ்ட், 1998ஆம் ஆண்டு CBI ஆல் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்றுவரை தனது விசாரணையை நடத்திவருவதாக கூறப்படுகின்றது.

முதலில் வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் , MDMA இன் விசாரணை அறிக்கைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. காணாமல் போன விவரங்களை ஆய்வு செய்யவேண்டியதும் முக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT