கோவா மாநிலத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் பசு மாடுகள் பனாஜியில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கலங்கட் என்ற பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 76 பசு மாடுகள் கலாங்கியூட் தொகுதி எம்எல்ஏ மைக்கல் லோபோ முயற்சியில் கோசலாவிற்கு கொண்டு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாடுகள் சிக்கன், மட்டன் மற்றும் மீன் வறுவல் உள்ளிட்ட அசைவ உணவுகளை மட்டும் தான் சாப்பிடுகின்றன. வழக்கமான கால்நடை தீவனங்களான புல், வைக்கோல் மற்றும் கோசாலையில் வழங்கப்படும் சிறப்பு உணவுகளை அந்த மாடுகள் திண்பது இல்லை.
இதையும் படிக்கலாம்.. புரட்டாசி மாதம் நிறைவு: மீன், இறைச்சிக் கடைகளில் திரண்ட அசைவப் பிரியா்கள்
ஏனெனில் இவை சாலைகளில் சுற்றித்திரிந்த போது ஓட்டல்களில் இருந்து கொட்டப்படும் குப்பையில் உள்ள சிக்கன், மீன் வறுவல் ஆகியவற்றை தின்று பழகி இருப்பதே இதற்கு காரணமாகும். இந்த தகவலை ஒரு விழாவில் பங்கேற்ற கோவா மாநில அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.
மேலும் கோசாலை நிர்வாகிகள் அந்த மாடுகளின் தீவன பழக்கத்தை அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாற்றுவதற்கான சிகிச்சை அளிக்க, கால்நடை மருத்துவர்களை அணுகி இருக்கின்றனர்.
பொதுவாக மாடுகள் அசைவம் சாப்பிடாது. வீடுகளில் மாடுகளுக்கு பழைய உணவு, கஞ்சி ஆகியவற்றை வைக்கும் போது கூட அசைவ உணவுகளின் மிச்சத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் கலந்துவிடக் கூடாது. அது பாவம் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.
இன்றோ, மாடுகளை அசைவ உணவில் இருந்து சைவத்துக்கு மாற்றுவதற்கான சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.