முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தமிழன்டா! சதுரங்கம் உலகிற்கு தமிழர்களின் கொடை!!

குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:11 AM
பகிர்:


சதுரங்கம் வரலாறு (History of Chess)


குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் முதன் முதலில் செஸ் தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ‘அஷ்டபாதா’ எனவும் ‘சதுரங்கா’ எனவும் இது அழைக்கப்பட்டது. அஷ்டபாதா என்ற வார்த்தைக்கு ‘எட்டுக்கு எட்டு கட்டங்களைக் கொண்ட சதுரப் பலகை’ என அர்த்தம். சத்ரங் என்ற பெயரில் தோன்றிய இந்த விளையாட்டு மெதுவாக evolve ஆகி  9ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்தது. 

ரஷ்யர்கள் இந்த விளையாட்டை பெரிதும் விரும்பி, மிகத் தீவிரமான முறையில் விளையாடத் துவங்கினர்.

15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (Europe) காலூன்றியது. அங்கு பல்வேறு மாறுதல்களுக்கு பிறகு, செஸ் உலகமெங்கும் பரவியது. செஸ் சீனாவில் தோன்றியது ஒரு தரப்பினர் சொன்னாலும், அது இந்தியாவில் தான் தோன்றியது என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த விளையாட்டில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட்டன. முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான் புத்தகம் எழுதிய பெருமை லூயிஸ் ராமிரேஸ் (Luis Ramirez) என்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரையே சாரும். அவருடைய Repetition of Love and the Art of Playing Chess என்ற புத்தகம் இன்றளவிலும் போற்றப்படுகிறது.

உலகளவிலான செஸ் போட்டி 1851ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. அதிசயமாக இதில் ஜெர்மனியைச் சேர்ந்த Adolf Anderssen என்பவர் வெற்றி பெற்றார். பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த Paul Morphy மிகக் குறுகிய காலத்திலேயே (1857-1863) உலக அளவில் பெரும் புகழ் பெற்றார். அதற்கு முன் இருந்த எல்லா பிரபல செஸ் விளையாட்டு வீரர்களையும் இவர் தோற்கடித்தார்.

இரண்டாம் உலகப் போருக்கு பின் நிறைய உலகப் போட்டிகள் நடத்தப்பட்டன. World Chess Federation (FIDE) 20 ஜூலை 1924 ம் ஆண்டு தொடங்கப்பட்டதையே இப்போது நாம் உலக செஸ் தினமாகக் கொண்டாடுகிறோம். மன்னர்களின் புத்தகம் (The Book of Kings) என்ற நூலில் சதுரங்கம் பற்றிய ஒரு கதை உள்ளது.

கி. பி. 6- ம் நூற்றாண்டில் ஒரு இந்திய அரசர் சவாலான ஒரு விளையாட்டைக் கண்டுபிடிப்பவருக்குப் பரிசளிப்பதாக அறிவித்தார். மன்னர் எதிர்பார்த்த விளையாட்டை, தான் கண்டறிந்துள்ளதாக சிசா இபின் தாகிர் என்பவர் கூறினார். சதுரங்க விளையாட்டு குப்தர்கள் காலத்தில் துவங்கியது. சதுரங்கம் பண்டைய இந்தியாவில் விளையாடப்பட்ட ஒரு பலகை விளையாட்டு. இதுவே தற்காலத்தில் உலகம் முழுதும் பிரபலமாக விளையாடப்பட்டுவரும் "செஸ்" விளையாட்டின் முன்னோடியாகக் கருதப்படுகின்றது. 

இது இந்தியாவிலிருந்து பாரசீகம் வழியாக மேலை நாடுகளுக்குச் சென்றதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விளையாட்டு குப்தர்களின் காலகட்டத்தில் பொதுவருடம் 6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் சரியான விதிமுறைகள் தெரியவில்லை. பின்னர் இவ்விளையாட்டு பாரசீகம் வழியாக மத்திய ஐரோப்பாவை அடைந்து தற்காலத்திய சதுரங்க விளையாட்டாக உருப்பெற்றது. இவைகள் பழங்கதையானது.

தமிழர்களின் 2600 க்கு பழைமையான சதுரங்கம்


சதுரங்க விளையாட்டில் உள்ளது போலவே யானைப்படை குதிரைப்படை என ஏராளமான படைகளை வைத்திருந்தவர்கள் தமிழர்கள். போர் வியூகங்களால் எல்லைப்பரப்பை விரிவு செய்தவர்கள் தமிழர்கள். போர் வியூகங்களை வகுக்கவும் அரசியல் நகர்வுகளை வகுக்கவும் இந்த சதுரங்கம் தமிழருக்கு உதவியிருக்கும். 

கீழடியில் பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டில் பயன்படும் பல்வேறு அளவிலான தந்தத்தாலான சதுரங்க காய்கள் கிடைத்துள்ளது. 

போர் என்றால் அதற்கு வீரமும் வியூகமும் தேவை. போர் மரபிற்கும் தமிழருக்கும் தொடர்பிருப்பதை போல வியூகம் வகுத்து போர் புரிய சதுரங்கத்திற்கும் போருக்கும் தொடர்புண்டு. சதுரங்கம் தமிழருடையது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.