கல்வி

முதலீடு இல்லை, செலவும் இல்லை லாபம் தரும் துளசி வியாபாரம்

கிருஷ்ணகிரி, டிச. 26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் துளசியை அறுவடை செய்யும் கிராம மக்கள், அவற்றை பெங்களூருக்கு அனுப்பி மாதம் ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்

எஸ்.கே ரவி

கிருஷ்ணகிரி, டிச. 26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் துளசியை அறுவடை செய்யும் கிராம மக்கள், அவற்றை பெங்களூருக்கு அனுப்பி மாதம் ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.

 கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மா, காய்கறிகள், ரோஜா பூக்களை அதிகமாக சாகுபடி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 ஆனால், எந்த முதலீடும் இல்லாமல் மாதம் ரூ. 10 ஆயிரம் வரை சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்ட கிராம மக்கள். ஆம். மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், மாந்தோப்புகள், ஆற்றங்கரை, வாய்க்கால்களில் அதிக அளவில் துளசி செடிகள் இயற்கையாகவே விளைகின்றன.

 மருத்துவ குணம் கொண்ட துளசியை, இந்து கோயில்களில் பயன்படுத்துகின்றனர். ஐயப்பன் கோயில்களில் சுவாமிக்கு துளசி மாலை அணிவிப்பது சிறப்பு. இத்தனை சிறப்புமிக்க துளசியை கிராம மக்கள் பகல் நேரங்களில் அறுவடை செய்து, மாலையாக கட்டி வருமானம் ஈட்டுகின்றனர்.

 இந்த துளசி மாலையை ஒரு முழம் 75 பைசா முதல் ஒரு ரூபாய் என கிராம மக்களிடம் இருந்து சிறு வியாபாரிகள் வாங்குகின்றனர். கிராம மக்கள் பலரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட துளசி சரம், மாலைகளை சிறு வியாபாரிகள், மொத்த வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

 ஆயிரக்கணக்கான துளசி சரம், மாலைகளை வாங்கும் மொத்த வியாபாரிகள் அவற்றை பெங்களுருக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

 இதுகுறித்து சிறுவியாபாரி சின்னையன்(48) கூறியது:  ஐப்பசி முதல் தை மாதம் வரை துளசி மாலைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஐயப்ப பக்தர்கள் துளசி மாலையை விரும்பி வாங்குவதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் துளசி மாலைக்கு அதிக கிராக்கி இருக்கும். அப்போது துளசி சரம் ஒரு முழம் ரூ. 5 முதல் 8 வரை விற்பனையாகும்.

 இதே துளசி சரம், பெங்களூரில் ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்பனையாகிறது. சிறிய, பெரிய துளசி மாலைகள் ரூ. 100 முதல் ரூ. 200 வரை விற்கப்படுகின்றன. இது முதலீடு இல்லாத தொழில். ஆண்டுக்கு 4 மாதங்களே செய்யக்கூடிய இத்தொழிலால் மாதம் ரூ. 10 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். விவசாயிகள் முறையாக துளசி பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT