முகப்பு
கல்வி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நவ.14 முதல் காலவரையற்ற விடுமுறை!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு வருகிற நவ.14-ம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு வருகிற நவ.14-ம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளி்யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது: தீபாவளி பண்டிகை முடிந்து நவ.14-ம் தேதி திறக்கப்பட இருந்த பல்கலைக்கழக அனைத்து துறை வகுப்புகளுக்கும் திரும்ப திறக்கப்படும் தேதி காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ.12-ம் தேதி முதல் நடைபெற இருந்த பல்கலைக்கழக செயல்முறை தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர்கள் விடுதி அறைகளை நவ.12-ம் தேதி மாலைக்குள் காலி செய்ய வேண்டும் என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments