முகப்பு
கல்வி

பி.எட். சேர்க்கை விண்ணப்பித்தோர் குறைவு!

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புக்கு (பி.எட்.) நிகழாண்டில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 

Updated On : 16 ஆகஸ்ட், 2016 at 3:11 AM
பகிர்:

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புக்கு (பி.எட்.) நிகழாண்டில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள 1,777 அரசு ஒதுக்கீட்டு பி.எட். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு

நிறுவனம் நடத்துகிறது.

Advertisement

இந்த நிலையில், 2016-17ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்காக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால், ஆகஸ்ட் 1 முதல் 9-ஆம் தேதி வரையிலான விண்ணப்ப விநியோக

காலத்தில் 4,001 விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையாகின. மேலும், 3,736 பேரே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.

2013-14ஆம் கல்வியாண்டில் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியதில் 10 ஆயிரம் பேரும், 2014-15ஆம் கல்வியாண்டில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானதில் 10,450 பேரும் பூர்த்தி செய்த

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். இது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது குறைவாகும்.

காரணம் என்ன? 2015-16ஆம் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) உயர்த்தியதே விண்ணப்பிப்பவர்களின்

எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு காரணம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் சு.வஜ்ரவேலு கூறியதாவது:

படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்ந்தது, கல்விக் கட்டணம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்ந்தது ஆகியன பி.எட். படிப்பின் மீதான மோகம் குறைந்ததற்கு காரணம். ஆண்டுக்கு ஒரு

லட்சம் பேர் பி.எட். முடித்து வெளிவருகின்றனர். ஆனால், அந்த அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால், பெரும்பாலானோர் முதுநிலை பட்டப் படிப்பில் சேரத் தொடங்கிவிட்டனர் என்றார்.

ஆர்வத்தைத் தூண்ட வழி என்ன?இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:-

படிப்புக் காலம் 2 ஆண்டுகளானது, 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.) தேர்வு நடத்தாதது போன்றவையே விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கு "நீட்' தேர்வைக் கொண்டுவருவதுபோல, பி.எட். சேர்க்கைக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு

எடுத்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால், வரும் ஆண்டுகளில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி வாய்ப்புகளை உடனடியாக அளிப்பதும், ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்துவதும்தான் பி.எட். மீதான ஆர்வத்தைத் தூண்ட முடியும்

என்றார்.

பி.எட். சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு மையத்தில் ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட்

25 (அரசு விடுமுறை நாள்), 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்களில் கலந்தாய்வு நடைபெறாது.

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என பி.எட். சேர்க்கை செயலர் தில்லைநாயகி கூறினார்.

154 பி.இ. பட்டதாரிகளும் பங்கேற்பு!

இதுதவிர, பி.எட். சேர்க்கையில் பி.இ. பட்டதாரிகளுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய 4 பிரிவுகளில் 220 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் இதற்காக பி.இ.

பட்டதாரிகள் 154 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பல்கலை. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.