கல்வி

 ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுகின்றனர். இதனை அதிகாரிகள் காவல்துறையினர் வேடிக்கை பார்த்து வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஆர்.கே.நகரில் நேற்று நடந்த மோதலின் போது காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் திமுக தொண்டர்களை சந்திப்பதற்காக ஸ்டாலின் இன்று காலை சென்னை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகரில் நேற்று தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஜனநாயகத்தை படுகொலை செய்து பணம் நாயகத்தால் வென்று விடலாம் என நினைக்கின்றனர். பணம் பட்டுவாடாவை தடுக்க மத்திய அதிகாரிகள் செயல்பட்டு வந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், போலீஸார் அவர்களை தப்ப விட்டு விடுகின்றனர்.

பணத்தை கொடுத்து டெபாசிட் வாங்கும் அளவிற்காவது வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கிறார்களா அல்லது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்களா என தெரியவில்லை.

இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் முறையிடப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT