கல்வி

5 ஆண்டு சட்டப்படிப்பு: கலந்தாய்வு தொடக்கம்

DIN

அரசு சட்டக் கல்லூரிகளில், பொது பிரிவினருக்கான 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.ஏ-எல்.எல்.பி. 5 ஆண்டு சட்டப்படிப்பு பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) எஸ்.டி., எஸ்.சி.ஏ., எஸ்.சி., பிரிவினருக்கும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி எம்.பி.சி., மற்றும் பி.சி.எம்., பிரிவினருக்கும், கடைசி நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி பி.சி., பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெறவுள்ளது. தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கான மாணவர் சேர்க்கை கடிதம் புதன்கிழமையன்று பல்கலைக்கழக அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT