கல்வி

நீட் குழப்பத்தால் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காத மாணவர்களுக்கு உரிய ஆலோசனை: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

DIN

நீட் குழப்பத்தால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத கவலையில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்காத வகையில் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.கிருத்திகா என்ற மாணவி தாக்கல் செய்த மனுவில், 'நான் பிளஸ் 2 தேர்வில் 1,184 மதிப்பெண்களுடன் 199.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 154 மதிப்பெண்ணும் பெற்றுள்ளேன். எனவே, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் என்னை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அவர் கூறியது:
மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த முடிவை தகுந்த நேரத்தில் எடுக்காமல் மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு தமிழக அரசுதான் காரணம்.
பல்வேறு பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வை எழுதும்போது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் போது, தனது மகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உருவாகுமோ என்ற அச்சத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றாததும், கற்பிக்கும் முறையை மாற்றாததும், நீட் தேர்வை நடத்த சிபிஎஸ்இ-க்கு அனுமதி வழங்கியதும்தான் மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற பிரதான காரணம்.
இவற்றால் மாணவர்கள், பெற்றோர் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத கவலையில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த தகுந்த ஆலோசனைகளை (கவுன்சிலிங்) தமிழக அரசு வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதி என்.கிருபாகரன், இந்த வழக்கில் விரிவான உத்தரவை புதன்கிழமை பிறப்பிப்பதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT