கல்வி

இந்திய மாணவர்களுக்கு விசா உச்ச வரம்பு இல்லை: பிரிட்டன்

DIN

இந்தியாவிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கான நுழைவு இசைவு (விசா) எண்ணிக்கையில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "பெண்களின் பொருளாதார அதிகார மேம்பாடு' குறித்த ஐ.நா. அறிக்கை வெளியீட்டு விழாவில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் ஆஸ்கித் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
இந்தியா மட்டுமன்றி, உலகின் எந்த நாட்டிலிருந்தும் மாணவர்கள் வருவதற்கான விசா எண்ணிக்கையில் பிரிட்டன் உச்ச வரம்பு நிர்ணயிக்கவில்லை.
யார் வேண்டுமானாலும் பிரிட்டன் வந்து, அங்கு ஏற்கெனவே உள்ள சுமார் 50 லட்சம் சர்வதேச மாணவர்களுடன் இணைந்து உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறலாம்.
இதற்காக, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் பிரிட்டனில் நிறைந்துள்ளன.
மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டன் பங்கு கொண்டு வருகிறது.
பிரிட்டன் நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் சராசரியாக 7 சதவீதத்தை இந்தியாவிலுள்ள பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக செலவிட்டு வருவதுடன், பெண்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன என்றார் அவர்.
கல்வி பயில்வதற்காக பிரிட்டன் செல்லும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் அண்மையில் தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையத் தொடங்கியது.
விசா கட்டுப்பாடுகளைக் குறைக்குமாறு இந்தியா கூறி வரும் நிலையில், இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT