கல்வி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

DIN

கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (ஜூலை 26) முதல் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஜூலை 26 -ஆம் தேதி காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வெழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
தமிழில் மாணவர்களின் பெயர்... மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் முதல்முறையாக தமிழில்
பதிவு செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளது. தமிழ் மொழியில் பதியப்பட்ட பெயரில் தவறான பதிவுகள் உள்ளதாக தலைமையாசிரியர்கள் கண்டறிந்தால், அந்தப் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஜூலை 25 -ஆம் தேதி முதல் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை... அதையும் மீறி தவறான பதிவுகள் இருப்பதாக மாணவர்கள், பெற்றோர் கண்டறிந்தால், தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு ஜூலை 26 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 -ஆம் தேதி வரை நேரில் சென்று தமிழ்ப் பெயரில் திருத்தம் கோரி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கடிதம் அளிக்க வேண்டும்.
தமிழ் பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள், ஆகஸ்ட் 21 -ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். புதிய மதிப்பெண் சான்றிதழை பெறும்போது மாணவர்கள் ஏற்கெனவே பெற்ற பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT