கல்வி

மத்திய கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் கல்லூரி மாணவர்கள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட செய்தி:
மத்திய அரசின் கல்வி உதவித் தொகைகள் அனைத்தும் தற்போது தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் (www.scholarship.gov.in)  மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்வி உதவித் தொகைகளைப் பெற 2015 -ஆம் ஆண்டு தகுதி பெற்ற கல்லூரி மாணவர்கள் சிலரால், 2016 -ஆம் ஆண்டுக்கு அதைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது.
எனவே, மத்திய கல்வி உதவித் தொகையை 2016 - ஆம் ஆண்டுக்கு புதுப்பிக்க விரும்பும் மாணவர்கள்www.cbse.nic.in   என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க ஜூலை 5 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT