கல்வி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

DIN

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வை டிஆர்பி ஜூலை 2 -ஆம் தேதி நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு 2,18,591 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பத்தாரர்களுக்கான நுழைவுச் சீட்டு (hall ticket) டிஆர்பி இணையதளத்தில்(www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இதை வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT